‛அந்த’ நேரத்தில் உயிரிழந்த நபர்; ஏன் என தெரிந்தால் ஷாக் ஆவிங்க!

29 January 2021, 9:59 am
Quick Share

பாலியல் தொழிலாளி ஒருவருடன் உடலுறவு மேற்கொண்ட 35 வயது நபர் ஒருவர் தனது பாலியல் இச்சையை தீர்த்த போதே உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், அவர் ‛தீவிர உச்சத்தை’ அடைந்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடப்பாவமே…!

சார்லஸ் மஜாவா என்ற நபர் ஒருவர், மலாவியின் பாலோம்பேயில் உள்ள பாலியல் தொழிலாளி ஒருவரிடம் சென்று, உடலுறவு மேற்கொண்டார். உடலுறவில் ஈடுபட்ட போதே, திடீரென சுயநினைவை இழந்து, சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார் என ‛தி சன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. அவர் உயிரிழந்ததை தனது சக தொழிலாளிகளிடம் முதலில் அந்த பெண் தெரிவித்திருக்கிறார். பின் நடந்த பிரேத பரிசோதனையில், அவர் புணர்ச்சியின் போது தீவிர உச்சத்தை எட்டியதால், இறந்துவிட்டார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீவிர புணர்ச்சியின் போது மூளையில் உள்ள மூளை நாளங்கள் சிதைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது மரணத்துக்கு அந்த பாலியல் தொழிலாளிக்கு எந்த பொறுப்பும் இல்லை என்பதால், அந்த பெண் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இதே போன்றதொரு சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நாக்பூரில் பதிவாகியது. 30 வயது இளைஞன் ஒருவன், பெண் ஒருவருடன் லாட்ஜில் உடலுறவில் ஈடுபட்டனர். காம இச்சையை அதிகரிக்க, பெண்ணின் கை, கால்களை நைலான் கயிற்றில் கட்டி, நாற்காலி ஒன்றுடன் இணைத்து, ஆணின் கழுத்திலும் கயிற்றை அதனை சுற்றி கட்டியிருக்கின்றனர். அந்த பெண் கழிவறை சென்று திரும்பி போது, தவறுதலாக கயிறு இருக்கியதில் அந்த ஆண் உயிரிழந்தது தெரியவந்தது. பின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் அவர் சேரிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையில், இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பின்னர் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை பராமரிக்கும் நபர்கள் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ்வதாக, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Views: - 18

0

0