நாயின் பிறப்பு உறுப்பை துண்டித்த வீட்டு உரிமையாளர் – கான்பூரில் தான் இந்த பயங்கரம்

15 April 2021, 3:46 pm
Quick Share

நாய் வளர்த்து வந்த அதன் உரிமையாளரே, அந்த நாயின் பிறப்பு உறுப்பை துண்டித்த நிகழ்வு, உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில் அரங்கேறி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் மிருக சித்ரவதையின் உச்சமாக கருதப்படுகிறது. ரசுலபாத் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சுஜான்புர் பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் இருந்து, நாயின் வித்தியாசமான அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருப்பவர் அங்கு சென்று பார்க்கும்போது அது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். போலீசில் இதுகுறித்து புகார் தெரிவித்ததோடு மட்டுமல்லாது, பாதிப்படைந்த நாயை, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அவர் ரசுலாபாத் போலீசிடம் அளித்த புகாரில் தெரிவித்து உள்ளதாவது, எனது வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர் சுரேஷ் சிங். அவர் தனதுது மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார். அவர்கள் ஒரு நாயை வளர்த்து வந்தனர். சம்பவ நாள் அன்று, அவரது வீட்டில் புதிதாக ஒரு ஆள் தென்பட்டார். சிறிதுநேரத்தில், அவரது வீட்டில் இருந்து நாயின் வித்தியாசமான ஓலம் கேட்கவே, அங்கே சென்றேன். அப்போது, நாயின் பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக, நாயை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவனையில் சேர்த்ததாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இதுகுறித்த விசாரணையில், அவர்கள் மீது தவறு உறுதிப்படுத்தப்பட்டால், மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 429 மற்றும் 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Views: - 37

0

0