காட்டு யானையுடன் செல்பி! இளைஞரை சட்னி ஆக்கிய கொம்பன்!

1 March 2021, 7:16 pm
Quick Share

சத்தீஸ்கரில் காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரை. யானை மதித்து கொன்றது. செல்பி மோகத்தால் பலியான இளைஞருக்காக அப்பகுதி மக்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்க்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று (பிப்ரவரி 28) மனோகர் படேல் என்ற 21 வயது இளைஞர், தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து காட்டு யானை முன் செல்பி எடுக்க முயன்றார். சற்று தொலைவில் இருந்த மூவரும், சிறிது சிறிதாக முன்னேறி, யானைக்கு மிக அருகில் சென்றுவிட்டனர். அப்போது மொபைலில் செல்பி எடுக்க, கடுப்பான யானை மூவரையும் விரட்டியிருக்கிறது. தப்பித்தால் போதும் என அவர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடியிருக்கின்றனர்.

ஆனால் மனோகர் மட்டும் யானையிடம் மாட்டி கொண்டார். அவரை பந்தாடிய யானை மிதித்து கொன்றனது. சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்டமாக இறந்தவரின் குடும்பத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அந்த யானை சமீபத்தில் தான் தனது குட்டியை பிரிந்தது எனவும், இதனால் மோசமான மனநிலையில் அது இருந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுர்குஜா, சூரஜ்பூர், கோர்பா, ராய்கர், ஜாஷ்பூர், பால்ராம்பூர் மற்றும் கொரியா மாவட்டங்களை உள்ளடக்கிய அடர்ந்த காடுகள் நிறைந்த வடக்கு சத்தீஸ்கரில், சமீப காலங்களில், மனித- யானை மோதல் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. என்று தான் தணியுமோ இந்த செல்பி மோகம்..!

Views: - 11

0

0