இன்னும் ரெண்டே சான்ஸ்! பாஸ்வேர்டு தெரிஞ்சா ரூ.1800 கோடி அள்ளலாம்.. ஆனா..

14 January 2021, 3:44 pm
Quick Share

ஜெர்மனி இளைஞர் ஒருவர் பாஸ்வேர்டை சேமித்து வைத்திருக்கும் ஹார்ட் டிஸ்க்கின் பாஸ்வேர்டையே மறந்து போனதால், அவருக்கு கிடைக்க வேண்டிய 1800 கோடி ரூபாய் (245 மில்லியன் டாலர்) என்னவாகுமோ என்ற பதைபதைப்பு ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது தெரியுமா..?

ஜெர்மனியை சேர்ந்த புரோகிராமரான ஸ்டீவன் தாமஸ், தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்த போட்டி ஒன்றில், வெற்றி பெற்றதற்காக 7,002 பிட்காயின்களை பரிசாக வென்றிருக்கிறார். அவர் வெற்றி பெற்ற போது, பிட்காயின்கள் மதிப்பும் குறைவு; வெளியுலகிலும் அது அவ்வளவு பரிச்சயமில்லாத சமயம்.

பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டின் பாஸ்வேர்டை, தனது ‘அயர்ன் கீ’ என்ற ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்துள்ளார். அந்த அயர்ன் கீ பாஸ்வேர்டை, ஒரு பேப்பரில் எழுதி வைத்துள்ளார். நாளாக நாளாக, பிட்காயின் மதிப்பு கண்ணா பின்னா என எகிறி வர, அயர்ன் கீயை ஓபன் செய்ய முடிவு செய்திருக்கிறார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம், அதன் பாஸ்வேர்டை மறந்து விட்டார். பாஸ்வேர்ட் எழுதி வைத்த பேப்பரையும் மறந்து விட்டார்.

இதுவரை ஏதேதோ செய்து 8 முறை பாஸ்வேர்டு போட்டு முயற்சித்து பார்த்தும், அது தோல்வியில் முடிந்திருக்கிறது. ‘அயர்ன் கீ’யை பொறுத்தவரை, 10 முறை பாஸ்வேர்டை தவறாக போட்டுவிட்டால், அதில் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அழிந்து போய்விடும். இன்னும் இரு முறை மட்டுமே அவர் முயற்சிக்க முடியும்.. ஒருவேளை அவரால் பாஸ்வேர்டை சரியாக போடவில்லை என்றால், அந்த 1800 கோடி ரூபாயும் கிணற்றில் போட்ட பணம் தான்…

Views: - 7

0

0