இதுக்கு பேர் தான் கர்மா! சுட்டவரின் கண்ணை அடுத்த நொடியே பறித்த பறவை

5 February 2021, 10:18 pm
Quick Share

வானில் பறந்து கொண்டிருந்த பறவையை, வயல்வெளியில் இருந்து ஒருவர் தனது துப்பாக்கியால் சுட, அடுத்த நொடி பறவை அவரை வந்து தாக்கியது. இதில் அவரது வலது கண்ணில் கொத்தியதால், அவர் வலியில் துடித்து கொண்டிருக்கிறார். இதற்கு பெயர் தான் கர்மா என நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நமது பேச்சு முதல் செயல் என எல்லாவற்றிற்கும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எதிர்வினை அல்லது கர்மா உண்டு. தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி. ஆனால், தன்னை துப்பாக்கியால் சுட்டவருக்கு, அடுத்த நொடியே பறவை ஒன்று தண்டனை தர, அது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா, தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இதற்கு பெயர் தான் கர்மா என குறிப்பிட்டிருக்கிறார். வெறும் 6 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், வானத்தில் பறக்கும் பறவை ஒன்றை, தனது வயல்வெளியில் இருந்து துப்பாக்கியால் சுடுகிறார்.

அவரது குறி தவறிவிடுகிறது. ஆனால், தப்பித்த அடுத்த நொடியே, வானத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தரைக்கு பறந்து வந்த அந்த பறவை, சுட்டவரின் வலது கண்ணை கொத்தி விட்டு பறந்து செல்கிறது. இதில் அவர் வலியால் துடிக்கிறார். இந்த வீடியோ, நெட்டிசன்களை கவர, அவர்கள் அதனை வைரலாக்கி உள்ளனர்.

இதுதான் உண்மையான கர்மா என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர், பறவைகள் பழிவாங்கும் என்பதை இன்று தான் தாங்கள் பார்ப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 1

0

0