அட கொள்ளையடிக்க இப்படி ஒரு ஐடியாவா? – ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!!

22 January 2021, 7:08 pm
Quick Share

கொரோனா உள்ளிட்ட தொற்றுகளிலிருந்து பாதுகாத்து கொள்ள பயன்படும் தனிநபர் பாதுகாப்பு கவசத்தை அணிந்து நகைக்கடையில், ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகளை, திருடன் கொள்ளையடித்துள்ள சம்பவம், தலைநகர் டில்லியில் அரங்கேறி உள்ளது.

கொரோனா உள்ளிட்ட தொற்றுகளிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள், தனிநபர் பாதுகாப்பு கவசம் (Personal Protective Equipment (PPE)) பயன்படுத்தி வருகின்றனர். தலைநகர் டில்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கல்காஜி பகுதியில் உள்ள நகைக்கடையில், ஜனவரி 20ம் தேதி இரவு புகுந்த திருடன், தன் அடையாளத்தை மறைப்பதற்காக, 

தனிநபர் பாதுகாப்பு கவச உடையை அணிந்திருந்தான். இரவு 9.40 மணியளவில் கடையில் புகுந்த திருடன், வியாழக்கிழமை அதிகாலை 03.50 மணியளவில், தான் கொள்ளையடித்த நகைகளுடன் கடையை விட்டு வெளியேறியுள்ளான். இது முழுவதும் கடையில் இருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக, நகைக்கடை உரிமையாளர், கல்காஜி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்ததை தொடர்ந்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிட்ட போலீசார், அப்பகுதியிலேயே எலெக்ட்ரிசீயனாக செயல்பட்டு வந்த ஷேக் என்பவரே, திருடன் என்பதை கண்டறிந்து அவனை கைது செய்ததோடு, அவனிடமிருந்து 25 கிலோ மதிப்பிலான தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

இதுதொடர்பாக,  தென்கிழக்கு டில்லி போலீஸ் கமிஷனர் ஆர்.பி. மீனா கூறியதாவது,நகைக்கடை, கல்காஜி பிளாக் ஹெச் தளத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்த பிளாக்கை, ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாத்து வரும் நிலையில், கொள்ளையன், 3 கட்டடங்களை தாண்டி, கயிறு வழியாக, நகைக்கடைக்குள் நுழைந்துள்ளான். கொள்ளையன், இதற்கு முன்னரே, அதிக தடவை நகைக்கடைக்குள் வந்து நோட்டமிட்டுள்ளான்.

பூட்டிய கடைக்குள் எப்படி இறங்குவது என்பது குறித்து நன்கு தெரிந்து கொண்ட பின்னரே, தனது சதித்திட்டத்தை செயல்படுத்தியுள்ளான். போலீசார், சிசிடிவி பதிவு உதவியுடன்துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.

Views: - 4

0

0