காலை உணவை தவிர்த்தால் 180 ஆண்டுகள் வாழலாம் – மில்லியனரின் பலே ஐடியா

3 February 2021, 4:23 pm
Quick Share

காலை உணவை தவிர்ப்பதன் மூலம், தான் 180 ஆண்டுகள் உயிர் வாழப்போவதாக மல்டிமில்லியனர் டேவ் ஆஸ்ப்ரே தெரிவித்துள்ள செய்தி,சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இன்றைய நவநாகரீக உலகில், சரியான உணவு கிடைக்காமல், பலர் மரணம் அடைந்து வரும் நிலையில், காலை உணவை தவிர்ப்பதனால், நாம் இரண்டு பேரது வாழ்வினை வாழ முடியும் என்று மல்டிமில்லியனரான டேவ் ஆஸ்ப்ரே, தனது நண்பர்களுடனான உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

டேவ் ஆஸ்ப்ரே, தனது நண்பர்களான ஹோலி வில்லோபி மற்றும் பிலிப் ஸோபீலட்டுடன் வீடியோ கான்பரன்சிங்கில் நடந்த உரையாடலில் கலந்துகொண்டார்.   அந்த உரையாடலின் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஆழ்ந்த உறக்கம்,கிரையோ சிகிச்சை மற்றும் தொடர்ந்த உண்ணாவிரத சுழற்சிகள் போன்ற அணுகுமுறைகளை நாம் இடைவிடாது கடைப்பிடித்து வந்தால், 

இந்த நீண்ட ஆயுட்காலம் என்பது நம்மால் முடியும் விசயமே ஆகும். இந்த அணுகுமுறைகளை நாம் மேற்கொண்டாலே, நமது உடலின் சக்தி அளவுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். இது இரண்டு பேரது வாழ்வை நாம் ஒருவரே வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலையை ஏற்படுத்தித் தரும்.

காலை உணவை தவிர்க்க வேண்டும் என்பது இதில் முக்கியமான ஒன்று ஆகும். நாம் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், அன்றைய தினத்தில் நமக்கு அதிக சக்தி கிடைக்கும். இதன்மூலம், கணிசமான அளவில் உடல் எடை குறைவதோடு, நாம் புத்துணர்வுடன் இருக்கவும் உதவும். மதிய உணவை எப்போதும் சாப்பிடும் நேரத்தை விட ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே உட்கொள்ள வேண்டும். இது உங்கள் உணவை ஜீரணிக்க உதவுவது மட்டுமல்லாது, 

நமது உடலை தன்னிச்சையாகவே சரி செய்து கொள்ளவும் உதவுகிறது. இந்த போட்டியில் 180 ஆண்டுகள் வரை வாழ இருப்பதற்காக தான் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு டேவின் நண்பர்கள் மாறுபட்ட கருத்துகளையே தெரிவித்தனர்.
துரதிருஷ்டவசமாக, 180 ஆண்டுகள் வரை வாழ நினைத்த டேவ் ஆஸ்ப்ரே தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0