30 ஆண்டுகளாக இடைவிடாத புகைப்பழக்கம் – உடலில் நிகழ்ந்த விசித்திர மாற்றம்

Author: Udayaraman
3 February 2021, 4:04 pm
Quick Share

30 ஆண்டுகளாக நாள்தோறும் இடைவிடாது சிகரெட் புகைத்து வந்த ஒருவரின் உடல் முழுவதும் அடர் மஞ்சள் நிறத்தில் மாறிய நிகழ்வு, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.


குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம், உடல்நலத்திற்கு கேடு என்று திரைப்படங்கள் போடுவதற்கு முன் போடப்படும் விழிப்புணர்வு பலகை எந்தளவிற்கு முக்கியம் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த 60 வயது நிரம்பிய டியு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது புகைபிடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.  அவருக்கு சமீபத்தில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் மஞ்சள் நிறத்திற்கு மாற துவங்கியது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், அவரது நுரையீரலில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் அவருக்கு மஞ்சள்காமாலை இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.  இந்த கட்டி, உடலில் உள்ள பித்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கட்டி மட்டுமல்லாது, உடலின் மற்றொரு பாகத்திலும் மேலும் ஒரு கட்டி உருவாகியிருந்தது. இந்த கட்டிகளை அகற்றுவதன் மூலமே, அவர் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.


இதனையடுத்து, ஆபரேசன் மூலம், அந்த கட்டிகள் அகற்றப்பட்டன. இதனையடுத்து, அவரது தோல் நிறம் மீண்டும் சாதாரணமாக மாற துவங்கியது. மருத்துவமனையில் இருந்து டியு, சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீண்டும் புகைப்பழக்கதை தொடர மாட்டேன். குடிப்பழக்கத்தையும் தொடர மாட்டேன். உணவு உள்ளிட்ட வாழ்க்கை நடைமுறையில் இனி அதிக கவனம் மேற்கொள்வேன் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே,  டியு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 36

0

0