குடிக்காமலேயே போதையாகும் முதியவர்.. இது எப்படி சாத்தியம்?

13 January 2021, 7:24 pm
Quick Share

குடித்துவிட்டு போதையில் சுற்றும் மனிதர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் குடிக்காமலேயே போதையானவரைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம் ஒரு மனிதர் குடிக்காமலேயே போதையில் சுற்றி வருகிறார். லண்டனைச் சேர்ந்த நிக் கார்சன் என்ற 62 வயது முதியவர் தான் குடிக்காமலேயே போதையில் சுற்றும் நபர்.

இவருக்கு ஆட்டோ ப்ரோவரி சின்ட்ரோம் என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் அவர்கள் உடலில் உள்ள ஒரு விதமான மைக்ரோப்ஸ் அந்த கார்போ ஹைட்ரேட்உடன் கலந்து எத்தனால் உருவாக்குகிறது. இந்த எத்தனால் சிறுநீரகம் வழியா ரத்தத்தில் கலந்து அவரை போதையாகச் செய்கிறது.

முதலில் இவருக்கு இந்த வியாதி இருப்பது தெரியாது. இவர் அந்நாட்டில் தூய்மை பணியாளராக இருக்கிறார். பணியின் போது இவருக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போனதாகக் கூறி வீட்டிற்கு வந்து விடுவார் பணிக்குச் சென்ற சில மணிநேரங்களிலேயே வீட்டு வருவதால் என்ன பிரச்சனை என்பது தெரியாமல் இருந்தது. வீட்டிலிருந்து நன்றாகச் செல்பவர் மீண்டும் வீட்டிற்கு வரும்போது உடல் நிலை சரியில்லாமல் போகிறது. சிறிது நேரம் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடுகிறார் இதற்கான காரணம் தெரியாமல் இவரும் இவரது மனைவியும் தவித்து வந்த நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் இவர்கள் இந்த வியாதி பற்றி தெரிந்துகொண்டனர்.

பின்னர் இவர்கள் யோசித்த பார்த்த போது இவர் காலை உணவு சாப்பிட்ட போது எல்லாம் உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளார் என்பது தெரிந்து டாக்டரை பார்த்த போது அவர்கள் இவருக்கு நடத்திய சோதனையில் இவருக்கு இவ்வாறு ஒரு வியாதி இருப்பது தெரியவந்தது. பின்னர் இது அவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என ஆய்வு செய்ததில் இவருக்குத் தனது 20வது வயதில் ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் பணியாற்றிய போது நடத்த விபத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது தெரியவந்தது.

இவர் குடிக்காமலேயே பல நேரம் வாகனம் ஓட்டி ப்ரீத் அனலைசர் சோதனையில் சிக்கி அபராதம் கட்டியுள்ளார். அதனால் தற்போது இவர் எங்குச் சென்றால் ப்ரீத் அனலைசரை கையில் வைத்துக்கொள்கிறார்.ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதில் தன் உடலில் உள்ள போதையின் அளவை சரி பார்த்துக்கொள்கிறார். இந்த வியாதிக்குத் தீர்வே கிடையாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் வேறு வழியின்றி தவித்து வருகிறார்.