கல்யாண்பாய்க்கு 63 வயதில் முடிந்த கல்யாணம் : அடுத்த சில மணி நேரத்தில் கரைந்து போன மகிழ்ச்சி!

30 January 2021, 2:41 pm
Kalayanboy - Updatenews360
Quick Share

குடும்ப சூழல் காரணமாக 63 வயதில் திருமணம் முடித்த குஜராத்தை சேர்ந்தவர், அடுத்த சில மணி நேரத்திலேயே மனைவியை பறிகொடுத்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் பீப்பல்சட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்பாய். தற்போது 63 வயது நிறைந்திருக்கும் இவருக்கு, பல ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை. குடும்ப சூழல் காரணமாகவும் இவரது திருமணம் தள்ளி போய் கொண்டே இருந்திருக்கிறது. தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் மற்றும் விதவை சகோதரியை இவர் தான் பராமரித்து வந்திருக்கிறார்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவருக்கு சிறிதும் குறையவில்லை. தொடர்ந்து அவருக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து வந்துள்ளது. லைலாபென் என்ற 40 வயது பெண், இவரை மணம் முடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனால் கல்யாண கனவில் மிதந்திருக்கிறார் கல்யாண்பாய். கிராம மக்கள், உறவினர்கள் முன்னிலையில் மகிழ்ச்சியுடன் மணமகளுக்கு தாலி கட்டியிருக்கிறார் கல்யாண்பாய். ஆனால் அவரது மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை.

தாலி கட்டியபின் வீட்டிற்கு சென்ற மணமகள் லைலாபென் திடீரென தரையில் சுருண்டு தரையில் விழுந்து இறந்துவிட்டார். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. அதிர்ச்சியில் துடித்துப்போன கல்யாண்பாய், மனைவியின் உடலை பார்த்து கதறி கதறி அழுதிருக்கிறார். மனைவியின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தி, அவரே தகனமும் செய்திருக்கிறார். இது ஒட்டு மொத்த கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாவம்…!

Views: - 16

0

0