இது தான் சுறா தாக்குதல்; சீல்லை எப்படி சாப்பிடுது பாருங்க..!

21 January 2021, 8:44 pm
Quick Share

முதுகெலும்பை ஜில்லிட வைக்கும் புகைப்படம் ஒன்று மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை சுறா ஒன்று கடலில் இருந்து வெளியே எம்பி குதித்து, தனது இறையான சீல் ஒன்றை பிடிக்கும் காட்சி தான் அது.

15 அடி நீளமுள்ள ஒரு பெரிய வெள்ளை சுறா, உலகின் மிகக் கொடிய சுறாக்களில் ஒன்று. இவற்றின் வாயில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட கத்தி போன்ற கூரிய பற்களால், அவற்றின் இரையை நொடிகளில் கிழித்தெறிந்து விடும். 4,000 பவுண்டுகள் எடை கொணட் அவை ஆறு மீட்டருக்கும் அதிகமாக வளரும்.

இந்நிலையில் டிஸ்னி பிளஸ், நேஷனல் ஜியோகிராஃபிக்கின் பிக் ஷார்க்ஸில் வெள்ளை சுறாவின் தாக்குதல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் சீல் தீவில் அதில் சீல் கடலின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கின்றன. அப்போது சுமார் 23 அடி நீளம் கொண்ட பெரிய வெள்ளை சுறா ஒன்று, கடலிலிருந்து எம்பி குதித்து, அதில் ஒரு சீலை தனது வாயில் கவ்வுகிறது.

தனது வலிமையான பற்களால், சீலை சுறா கடிக்க, கிரைண்டருக்குள் மாட்டிய மாவு போல் ஆகிப்போனது அந்த சீல். மீண்டும் தண்ணீரில் சுறா விழும் போது, பெரும் விபத்து நடந்தது போல், தண்ணீர் தெறித்து விழுகின்றன. முதுகை ஜில்லிட வைக்கும் அந்த காட்சி நம்ப முடியாத வகையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட நெட்டிசன்கள், ‘கடலின் ஆழமான பகுதிக்கு நீந்த கூடாது. இந்த சுறாவிடம் சிக்கினால் சட்னி தான்’ என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 9

0

0