கிளம்பியது கொசு சூறாவளி! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.. வைரல் வீடியோ

28 February 2021, 8:34 pm
Cyclone - Updatenews360
Quick Share

சாலையில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள், கொசுக்கள் சூறாவளியாக கிளம்பி வந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். அர்ஜென்டினாவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாலையில் நீங்கள் வாகனம் ஓட்டும் போது, உங்களுக்கு முன்னால் ஒரு பெரிய சூறாவளி வருவதை கண்டால் என்ன செய்வீர்கள்.. கற்பனை செய்து பாருங்கள்.. ஆனால் வருவது காற்று சூறாவளி இல்லாமல், கொசு சூறாவளி இருந்தால்… ஆம்.. நகர்ந்து வந்த இந்த சூறாவளியால், காற்று அடிக்கவில்லை.. மரங்கள் பேயாட்டம் ஆடவில்லை.. அருகில் வந்தபின் தான், அது கொசுக்கள் கூட்டம் என வாகன ஓட்டிகள் புரிந்து கொண்டு திகைத்துப் போயினர்..

சமீபத்தில் அர்ஜென்டினாவில் இந்த சம்பவம் நடந்தது. ஜெனரல் மதரியாகா – பினாமர் சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள், தூரத்தில் சூறாவளி சுழன்று வருவதை கண்டிருக்கின்றனர். அருகில் வரும் போது தான் தெரிந்திருக்கிறது, அது சூறாவளி இல்லை; கொசுக்கள் கூட்டம் என்று. தரையில் எழுந்த கொசு கூட்டங்கள், தூரத்திலிருந்து பார்க்க ஒரு சூறாவளியை போல இருந்திருக்கிறது. வாகன ஓட்டி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட, அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை அர்ஜென்டின வானிலை ஆய்வாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர், இது பெரிதாகி கொண்டே வருகிறது. இதுபோல் ஒன்றை நான் பார்த்தது இல்லை என பதிவிட்டிருக்கிறார். இதனால் உள்ளூர் மக்கள் கலக்கம் அடைந்திருக்கின்றனர்.

Views: - 14

0

0