ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் முஸ்லீம் பெண்…

21 January 2021, 3:00 pm
Quick Share

அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமிய மக்களும் அதிகளவில் நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஜஹாரா பேகம் என்ற இஸ்லாமிய பெண் கோரிக்கை விடுத்திருக்கும் நிகழ்வு, நாம் மதங்களால் வேறுபட்டிருந்தாலும்,மனிதநேயத்தால் ஒன்றிணைந்து காணப்படுவதையே உணர்த்துகிறது.

ஜஹாரா பேகம், தஹீரா டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலம், அவர் மத வழிபாட்டு தலங்கள் அமைப்பதற்கு தேவையான நிதியுதவிகளை ஏற்படுத்தி வருகிறார். நிதி சேகர்னா திட்டத்தின் கீழ், நிதி சம்பர்னா பிரிவில் ராமர் கோயில் கட்டுவதற்கு, இஸ்லாமிய மக்களும் அதிகளவில் நிதியுதவி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.  இந்த அளவு தான் பணம் வழங்க வேண்டும் என்பது இல்லை.தங்களால் முடிந்த தொகை ரூ. 10 தான் என்றாலும், அதை அவர்கள் தாராளமாக வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நமது வழிபாட்டு தலங்களான மசூதிகள், தர்காக்கள், கல்லறைகள் உள்ளிட்டவைகளை கட்டுவதற்கு இந்து மக்கள் அதிகளவில் நிதியளித்துள்ளனர். அந்த நன்றிக்கடனை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. கடவுள் ராமர் பிறந்த நாட்டில், நாமும் பிறந்துள்ளதற்கு நாம் அனைவரும் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். நாம் இருக்கும் இந்த காலகட்டத்திலேயே, ராமருக்கு கோயில் கட்டப்படுமாயின் அதைவிட பெரிய நிகழ்வு நம் வாழ்வில் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.

தர்ம நெறியை தனது வாழ்க்கை முறையாக கொண்டு வாழ்ந்த கடவுள் ராமர், இந்த விசயத்தில், உலகம் முழுவதற்கும் அவர் முன்மாதிரியாக திகழ்கிறார். ராமர் கோயில் கட்ட நம் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் திறந்த மனதுடன் அதிகளவில் நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஜஹாரா பேகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 4

0

0