ஷேம் ஷேம் பப்பி ஷேம்! லண்டன் தெருக்களில் சுற்றிய நிர்வாண மனிதன்

30 January 2021, 5:02 pm
London Naked Man - Updatenews360
Quick Share

லண்டன் தெருக்களில் ஆண் ஒருவர் நிர்வாணமாக வலம் வந்ததையடுத்து, அவரது புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அவர் இதுவரை பிடிபடவில்லை. தன்னை சுத்தப்படுத்துவதற்காக நிர்வாணமாக நடப்பதாக, பாதசாரி ஒருவரிடம் அவர் கூறி சென்றாராம்…!

கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு அந்நாட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுமார் 15 லட்சம் மக்களை, 3 மாதங்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவுவதால், வரும் ஜூன் மாதம் வரை பிரிட்டனில் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார். இந்நிலையில், பிரிட்டனில் புதிதாக ஒரு கலக்கு கலக்கியிருக்கிறான் நிர்வாண மனிதன்! லண்டன் வீதிகளில் நிர்வாணமாக அவன் ஓடியிருப்பது தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அருகில் நிர்வாணமாக ஓடிய அந்த மனிதனின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. பிறந்த மேனியில் ஓடிக் கொண்டிருக்கும் அந்த மனிதன், மிகவும் மகிழ்ச்சியாக ஓடியதாக அதனை கண்டவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வரும்போது, யார் அவ்வாறு ஓடியது என கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

அந்த கருமத்தை நேரில் பார்த்த 22 வயதான கேத்தரின் என்ற இளம்பெண் கூறுகையில், ‘அவர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் கார்டனை நோக்கி விரைவாக நடந்து கொண்டிருந்தார், பின் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை கடந்து சென்றார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் அவரை விட்டு விலகி நின்றனர்’ என்றார்.

நிர்வாண மனிதரிடம், பாதசாரி ஒருவர், ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டதற்கு, அவர், தன்னை சுத்தப்படுத்துவதற்காக ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு வந்ததாக தெரிவித்தாராம். நிர்வாண மனிதன் இன்னும் பிடிபடவில்லை. அவர் பிடிபட்டால், அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்தில் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0