இதுபோல் ஒன்றை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை! கருவிழியில் முடி கொண்டிருக்கும் மான்

24 February 2021, 2:44 pm
Quick Share

விசித்திர நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மான் ஒன்றுக்கு, அதன் கருவிழி முழுவதும் கற்றையாக முடி வளர்ந்திருக்கிறது. பார்க்க மிகவும் விசித்திரமாக இருக்கும் இந்த மான் போல, நீங்கள் வேறு எங்கும் பார்த்திருக்கிறீர்களா..? வாய்ப்பில்லை ராஜா.. சரி தானே!

கண்ணின் கருவிழிகளில் அடர்த்தியான முடி வளர்ந்திருக்கும் அபூர்வ வெள்ளை மான் ஒன்று, டென்னஸியின் புறநகரில் அலைந்து திரிந்திருக்கிறது. அதன் அசாதாரண அம்சம், கார்னியல் டெர்மாய்டு எனப்படும் அரிதான நோய் தான் காரணம். ஒரு குறிப்பிட்ட வகையின் திசு, தவறான இடத்தில் வளரும் போது, இது ஏற்படும். இதுதான் மானின் இந்த நிலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு பிற்பகுதியில் நாகஸ்வில்லில் புறநகர் பகுதியில் இந்த மான் காணப்பட்டிருக்கிறது. விசித்திரமான தோற்றத்தில் இருந்த அந்த மானை கண்டு உள்ளூர்வாசிகள் முதலில் பயந்திருக்கிறார்கள். பின் அதனை உற்று பார்க்கும் போதுதான், கண்ணில் இப்படி முடி வளர்ந்திருப்பதை கண்டிருக்கிறார்கள். ஆனால் மற்ற விலங்குகள் போல் அல்லாமல் அவை மனிதர்களை கண்டு பயப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதனை கொன்றுவிட்டனர். இது ஏதேனும் புதிய நோயாக இருக்கலாம் என்ற அச்சத்தில் மான் கொல்லப்பட்டிருக்கிறது.

அதன்பின் மானின் தலையை அதிகாரிகள், சோதனைக்கு அனுப்பி உள்ளனர். சோதனையில் மானுக்கு ரத்தக்கசிவு நோய் தான் இருந்திருக்கிறது என முடிவு வர அதிகாரிகள் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்நிலையில், கண்களில் முடி வளர்ந்திருக்கும் மானின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 5

0

0