நான் மீண்டும் டான்ஸ் ஆடுவேன்! கொரோனாவிலருந்து மீண்ட 89 வயது இளைஞர்!

Author: Udhayakumar Raman
14 March 2021, 3:27 pm
Quick Share

கொரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட 89 வயது முதியவர் ஒருவர், தனக்கு பிடித்த டான்ஸை மீண்டும் ஆடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுள் ஒன்று அமெரிக்கா. இங்கு பாதிக்கப்பட்டிருப்பவரகளின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் இன்றளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதியவர்கள் பலர் கொரோனா வைரசுக்கு பலி ஆகி வருகின்றனர். அதிசயத்திக்கும் வகையில் சிலர் மீண்டெழுந்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் இந்த 89 வயது இளைஞர்.

நியூயார்க்கை சேர்ந்த பாப் ஹோல்ஸ்மேன் என்ற 89 வயது முதியவருக்கு, கடந்த 2020 மார்ச்சில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக தனிமையில் வீட்டில் இருந்த அவர், நூலகத்திலிருந்து புத்தகங்களை படிப்பதையும், நண்பர்களுடன் ஆன்லைனில் ஸ்கிராப்பிள் விளையாடுவதையும் பொழுதுபோக்காக கொண்டார். விரைவில் கொரோனாவிலிருந்து மீண்ட இவர் தற்போது கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார். இதனால் தனக்கு மிகவும் பிடித்த டான்ஸை மீண்டும் ஆட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளார்.

கொரோனாவுக்கு முன்பு இவர், கடந்த 75 ஆண்டுகளாக நகர் முழுவதும் சம்பா, சல்சா மற்றும் பாக்ஸ் ட்ராட் நடனங்களை ஆடி வந்திருக்கிறார். நகரில் எங்கு நடன நிகழ்ச்சி நடந்தாலும் அவர் அங்கிருப்பாராம். ஆனால் கொரோனா தன்னை முடக்கிவிடும் என நினைத்த அவருக்கு, தடுப்பூசி போட்டதால் விடிவு பிறக்கும் என நம்புகிறார். விரைவில் தன்னால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் எனவும் எதிர்பார்க்கிறார். தன்னம்பிக்கையுடன் இருக்கும் அவரால் எதுவும் முடியும்..

Views: - 46

0

0