5 ஆண்டுகள் ரோமங்களுடன் காட்டில் சுற்றித்திரிந்த செம்மறி ஆடு! இப்ப எப்படி மாறிடுச்சு பாருங்க!!

25 February 2021, 9:31 pm
Quick Share

ஆஸ்திரேலியாவில் 35 கிலோ ரோமங்களை சுமந்தபடி, காற்றில் கடந்த 5 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த செம்மறி ஆட்டை மீட்ட தன்னார்வலர்கள் அதற்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள எட்கர்ஸ் மிஷன் சரணாலயத்தில் கடந்த 5 ஆண்டுகளாக செம்மறி ஆடு ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அதன் உடலில் இருந்த ரோமங்கள் மட்டும் 35 கிலோ எடை இருந்திருக்கிறது. மேலும் ரோமங்கள் மறைத்ததால், அதனால் பார்க்க முடியவில்லை. உணவு உட்கொள்ளவும் மிகுந்த சிரமத்தில் இருந்திருக்கிறது.

இதனை கண்ட சிலர், கடந்த ஜனவரி மாதம் எட்கர்ஸ் என்ற தொண்டு நிறுவனத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ஒரு வார தேடுதலுக்கு பின், காட்டில் அந்த ஆட்டை மீட்ட தொண்டு நிறுவனத்தினர். அதனை தங்கள் இடத்திற்கு வாகனத்தில் அழைத்து வந்து, மிஷின் மூலம் அதன் உடலில் இருந்த ரோமத்தை அகற்றினர். அளவிடப்பட்டதில் 35.4 கிலோ ரோமங்களை அகற்றியது தெரியவந்தது. இதனையடுத்து மறுவாழ்வு பெற்ற அந்த செம்மறி ஆடு, தனக்கு அளிக்கப்பட்ட உணவை ஆசை தீர உண்டு மகிழ்ந்தது.

இதுகுறித்து அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘‘காட்டில் செம்மறி ஆட்டை மீட்ட போது அது ஒரு பாறையின் மீது நின்று கொண்டு, அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திணறியபடி நின்றிருந்தது. ரோமங்கள் அதனை பார்வையை முழுவதுமாக மறைத்திருந்தது. இவ்வளவு எடையை அது சுமந்து கொண்டு 5 ஆண்டுகள் வாழ்ந்தது ஆச்சியம் தான்’’ இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 6

0

0