பாடிகாடுடன் லவ்.. லாக்டவுனில் ரகசிய திருமணம் செய்த பமீலா! இது எத்தனையாவது திருமணம் தெரியுமா?

29 January 2021, 1:31 pm
Quick Share

மாஜி நடிகையும், பிளேபாய் மாடலுமான பமீலா ஆண்டர்சன், தனது பாடிகாடான டான் ஹேஹர்ஸ்ட் என்பவரை கொரோனா ஊரடங்கின் போது, காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 5 திருமணங்கள் செய்துள்ளாராம்..! லிஸ்ட் பெருசா போகுதே..

கடந்த சில நாட்களுக்கு முன், இயற்கையோடு இணைந்து வாழப் போகிறேன் என அள்ளிவிட்டு, சமூக வலைதளப் பக்கங்கள் அனைத்திலும் இருந்து விலகினார் பமீலா ஆண்டர்சன். இந்த 53 வயது நிரம்பிய பே வாட்ச் புகழ் நடிகை, இப்போதும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 1.2 மில்லியன் பேர் பாலோ செய்து வந்த நிலையில், அவர் திடீரென தனது அக்கவுன்டை நீக்கியது நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்த செய்தது இந்நிலையில், 5வதாக ஒருவரை, அதுவும் தனது பாடிகார்டையே அவர் திருமணம் செய்துள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது பாடிகார்டு டான் ஹேஹர்ஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக, பமீலா ஆண்டர்சன் தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். கடந்த ஒரு ஆண்டாக அவருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ள பமீலா, கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள் அவரை திருமணம் செய்து கொண்டாராம். தன்னை நிஜமாகவே விரும்பும் கரங்களில் இப்போது அடைக்கலம் அடைந்திருப்பதாகவும், ஏழு ஜென்மங்கள் அவருடன் வாழ வேண்டும் எனவும் உருகியிருக்கிறார் பமீலா.

இதற்கு முன் பமீலா, கடந்த 1995ல் டாமி லீ என்பவரையும், 2006ல் கிட் ராக் என்பவரையும், 2007ல் ரிக் சாலமன் என்பவரையும், 2020ல் ஜான் பீட்டர்ஸ் என்பவரையும் திருமணம் செய்து கொண்டிருந்தார். இதில் ஜான் உடனான திருமணம் வெறும் வதந்தி என அவர் மறுத்திருக்கிறார். இதனை சமூக வலைதளங்களிலேயே சொல்லியிருக்கலாம் என அவரது ரசிகர்கள் அக்னி குஞ்சுகளாக பொங்கி வருகின்றனர்.

Views: - 0

0

0