கொரோனா வார்டில் ‘பேய்’: பெண் நோயாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…வைரலாகும் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
6 September 2021, 2:12 pm
Quick Share

மருத்துவமனை வார்டில் பிபிஇ கிட் அணிந்து வந்த ஊழியரை பேய் என நினைத்து பெண் ஒருவர் கூச்சலிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருத்துவமனை ஒன்றின் சிறப்பு வார்டில் நோயாளிகள் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது மருந்து கொடுப்பதற்காக மருத்துவமனை ஊழியர் ஒருவர் பிபிஇ எனப்படும் கவச உடை அணிந்து உள்ளே வருகிறார்.

உறங்கி கொண்டிருந்த பெண் நோயாளி ஒருவர் திடீரென ஊழியரை பேய் என நினைத்து கத்தி கூச்சலிட்டார். இதனை எதிர்பாராத ஊழியர் அந்த பெண்ணை அமைதிப்படுத்தி முயற்சித்துள்ளார். உடனே, அங்கிருந்த சக ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பெண்ணை அமைதிப்படுத்தினர்.

பிபிஇ கிட் அணிந்திருந்த மருத்துவமனை ஊழியரை பேய் என நினைத்து கத்தி கூச்சலிட்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 248

0

0