நாய்க்குட்டிக்கு வந்த வாழ்வை பாருங்க – வைரலாகும் போட்டோ

24 January 2021, 1:43 pm
Quick Share

நாய்க்குட்டிக்கு, அதன் உரிமையாளர் கேரள தேசத்தின் பாரம்பரிய ஆடை அலங்காரம் செய்து, அதற்கு விருந்து படைப்பது போன்று வெளியிட்டுள்ள போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மனிதர்களுக்கும், நாய்களுக்கும் உள்ள உறவை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மனச்சோர்வு நேரங்களில், நாய்க்குட்டியுடன் விளையாடும்போது, மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியாது. பல குடும்பங்களில், அந்த வீட்டின் ஒரு உறுப்பினராகவே நாய் இருந்து வருகிறது.

குழந்தைகள் இல்லாத வீடுகளில், நாய்களையே குழந்தைகளாக பாவித்து வளர்ப்பவர்களும் உள்ளனர். நாய்களையே குழந்தையாக அவர்கள் பாவிப்பதோடு மட்டுமல்லாமல், பண்டிகைக் காலங்களில் அதற்கும் மனிதர்களைப்போல ஆடைகளை உடுத்தி மகிழ்ச்சி அடைகின்றனர்.

அந்த வகையில், மலையாளி ஒருவர், தான் வளர்த்து வரும் நாய்க்கு, கேரள தேசத்து பாரம்பரிய ஆடைகளை அணிவித்ததோடு மட்டுமல்லாது, அதனை படம்பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

அந்த போட்டோவுக்கு தலைப்பாக, தங்கள் மகளை அழகான மலையாள பையனுக்கு திருமணம் செய்ய நினைப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

,இந்த போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. பலரும. இந்த போட்டோவை, பலரும் தங்கள் பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர். இந்த போட்டோ, டுவிட்டரில் ஜனவரி 22ம் தேதி பலரால் அதிக முறை பகிரப்பட்டு உள்ளது.

அடர் பிங்க் நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்து நாக்கை வெளியில் தொங்கப்போட்டு சிரித்தவாறு பின்புறம் பெண் பிடித்துக்கொள்ள அந்த நாய் நிற்பது போன்று ஒரு போட்டோவும், மற்றொரு போட்டோவில், எதிரில் தலைவாழை விரித்து இலை நிறைய பதார்த்தங்களும் இருக்கும் நிலையில் அருகில் அமர்ந்து இருப்பது போல் உள்ளது.

இந்த போட்டோவுக்கு பதில் அளிக்கும் விதமாக, காஷ்மீரில் உள்ள ஒரு டுவிட்டர் பதிவர், ஒரு பெண் நாயின் போட்டோவை பதிவிட்டு, இதோ என் பெண் என்று போட்டோவை பதிவிட்டுள்ளார். இவ்வாறாக, ஆடை அணிந்த நாயின் போட்டோ, இணையவெளியில் வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0