நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டே பிட்சா சாப்பிட ஒரு நாளைக்கு ரூ.36 ஆயிரம் சம்பளம்…!!

14 January 2021, 10:30 am
Netflix - Updatenews360
Quick Share

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பிங்கி/ நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டே பிட்சா சாப்பிட 500 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ36 ஆயிரம்) சம்பளம் வழங்குகிறது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

போனஸ்ஃபைண்டர் என்ற அமெரிக்க இணையதளம் “புரோபசனல் பிங்கி வாட்சர்” என்ற வேலையை தங்களது இணையதளத்தில் அறிவித்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி பிட்சா தினம் வருகிறது அன்றைய தினம் அந்நிறுவனம் சிலருக்கு நெட்பிளிக்ஸ் அல்லி பிங்கியில் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பார்த்துக்கொண்டே பிட்சா சாப்பிட வாய்ப்பளிக்கிறது. இது மட்டுமல்ல இது முடிந்தவுடன் பிட்சா சாப்பிட்டவர்கள் அவர்கள் நெட்பிளிக்ஸ்/பிங்கியில் பார்த்த நிகழ்ச்சி எப்படி இருந்தது என ரிவியூ சொல்ல வேண்டும், அதே போல அவர்கள் சாப்பிட்ட பிட்சாவும் எப்படி இருந்தது என விரிவாக ரிவியூ சொல்ல வேண்டும். இதற்காக அந்நிறுவனம் ஒரு நபருக்கு 500 டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ36 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ்/பிங்கியில் இந்த வேலைக்கு வருபவர்கள் அவர்கள் விரும்பிய நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

இதற்காக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது அடிப்படைத் தகவல்கள் உட்படத் தான் ஏன் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்பதையும் எழுத வேண்டும். அதை ஆய்வு தகுதியானவர்களுக்கு அந்த வேலையை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிட்சா சாப்பிட்டுக்கொண்டே நெட்பிளிக்ஸில் படம் பார்க்கக் கசக்கவா செய்கிறது? இந்த வேலைக்கு நீங்க அப்ளே பண்ணீட்டீங்களா?

Views: - 6

0

0