நாய், குதிரைகளுக்கு வந்த வாழ்வை பாருங்க! பென்ஷன் தரப்போறாங்களாம்!

29 March 2021, 2:11 pm
Poland Dog Pension - Updatenews360
Quick Share

நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, பென்ஷன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, போலந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் பல நாடுகளிலும், காவல் துறை, ராணுவத்தில், நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகள் பணியாற்றி வருகின்றன. பணிகாலத்தில் உரிய கவனிப்பு இந்த விலங்குகளுக்கு கிடைக்கும். அதன் பின் அவை கண்டுகொள்ளாமல் விடப்படும். இதனை மாற்ற போலந்து நாடு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. என்ன என்கிறீர்களா..?

ஐரோப்பியவில் இருக்கும் போலந்து நாட்டில், காவல் துறை, எல்லைக் காவல்படை, தீயணைப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில், நாய்கள் மற்றும் குதிரைகள் ஆகிய விலங்குகள் பணியாற்றி வருகின்றன. இவை தங்களது ஓய்வுக்கு பின், எதிர்காலத்தில் அல்லல்படும் சூழல் இருந்தது. அவைகளுக்கு தேவையான உரிய பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், சேவையில் இருக்கும் அந்த விலங்குகளுக்கு அரசு வேலை செய்வதாக கருத்தில் கொண்டு அவற்றிற்கு பணி வழங்கி, அவை ஓய்வு பெற்ற பின், பென்ஷன் வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான புதிய சட்ட மசோதாவையும், பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து போலந்து உள்துறை அமைச்சர் மேரியுஸ் கமின்ஸ்கி கூறுகையில், இந்த சட்ட மசோதா அடுத்த சில மாதங்களில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும், இதற்கு எம்.பி.க்கள் ஒருமனதாக ஆதரவு அளிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த பென்ஷன் தொகை, ஓய்வுபெறும் நாய், குதிரைகளின் மருத்துவ செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வாழ்வு தான் போங்க!!!

Views: - 0

0

0