ஓய்வின்றி பணியாற்றிய டோமினோ ஊழியர்களின் புகைப்படம் வைரல்

24 February 2021, 11:46 pm
Quick Share

கவுண்டரில் தீர்ந்து போன பீட்சாக்களுக்கு அருகே, டோமினோ ஊழியர்கள் இருவர் சோர்வாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும்படி நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்காவில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுங் குளிர் நிலவி வருகிறது. டெக்சாஸ் மாகாணம் பனிப்பொழிவால் சிக்கி உறைந்து போயிருக்கிறது. அங்கு தற்போது -12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலை நிலவி வருகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி போயுள்ளனர். பெரும்பாலான கடைகள் மற்றும் கடைகள் மூடப்பட்ட நிலையில், மில்லியன் கணக்கான மக்கள், உயிர்வாழ்வதற்காக ஆன்லைன் உணவு விநியோக சேவைகளை தான் நம்பியுள்ளனர். பிரபலமான டோமினோஸ் நிறுவனத்தில், ஈ போல மொய்க்கும் மக்கள், பீட்சாவை வரிசையாக ஆர்டர் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், டோமினோ ஊழியர்கள் சோர்வாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் டெக்சாஸில் உள்ள சான் அன்டோனியோவில் எடுக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 18 ஆம் தேதி, ஜூலை டெலூனா என்ற மற்றொரு ஊழியர் ஒருவர் இந்த புகைப்படத்தை கிளிக் செய்திருக்கிறார். மேலும் அவர் தனது பேஸ்புக் பதிவில், நெருக்கடியான சமயத்தில் வேலை பார்த்த அனுபவத்தையும், வார இறுதி நாட்களில், வெறும் 4 மணி நேரத்தில் உணவு விற்று தீர்ந்ததையும் விளக்கி உள்ளார்.

ஊழியர்கள் தங்களுக்கென உணவை எடுத்து கூட வைக்கவில்லை எனவும், மக்களுக்கு உணவு வழங்க தங்கள் உயிரை பணயம் வைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எங்கள் பீட்ஸா கடை மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற பீட்சா கடைகள் மூடப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்களுக்கு உதவ டோமினோக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய கடினமாக உழைக்கிறோம். நன்றி’’ என பதிவிட்டிருந்தார். அவர் தனது பதிவில் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவர்களது சேவையை பாராட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும்படி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

This extract has been extensively utilized among Cameroon villagers just because of its magnificent health advantages. cialis malaysia Various renowned celebrities also focus on the choice.

Views: - 7

0

0