இதுல எது ஆணின் உடம்பு! புதிய சோபாவில் தம்பதியினர் எடுத்த போட்டோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2021, 10:11 am
Viral Photo - Updatenews360
Quick Share

லண்டனில் உள்ள கிரீன்விச் நகரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது புதிய சோபாவில் அமர்ந்து போட்டோஷூட் எடுத்த போது, அதில் ஒரு புகைப்படம் புருவங்களை உயர்த்த செய்திருக்கிறது. தற்செயலாக எடுக்கப்பட்ட இந்த போட்டோ மாயை தோற்றத்தை உருவாக்க அந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

கெல்லி க்னாக் மற்றும் சாம் காசிடி தம்பதியினர், தங்கள் வீட்டிற்கு தேவையான சிறிய சோபா ஒன்றை வாங்கினர். ஆஸ்திரேலியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் இதனை பகிர்ந்து கொள்ள, சோபாவில் இருவரும் அமர்ந்து, போட்டோஷூட் ஒன்றை கடந்த வாரம் எடுத்தனர். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டனர். அதில் ஒரு புகைப்படம் தான் தற்போது வைரலாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில், தம்பதியினர் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இருக்கின்றனர். அதனை நெருக்கமாக பார்க்கும் போது, அவர்களது உடல்கள் மாறிக்கொண்டது போல் தோன்றுகிறது. இதற்கு காரணம் ‘ஆப்டிகல் மாயை’. இந்த புகைப்படம் திட்டமிடுதல் இன்றி எடுக்கப்பட்டது. இயற்கையாகவே அவ்வாறு அமைந்து விட்டது என செய்தி நிறுவனத்திடம் சாம் தெரிவித்துள்ளார்.

இந்த ஜோடி கடந்த செப்டம்பர் மாதம் அடர் பச்சை நிறத்தினாலான இந்த சோபாவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கின்றனர். ஆனால் அது டெலிவரி செய்யப்படுவதற்கு 5 மாதங்கள் தாமதம் ஆகி இருக்கிறது. இந்த புகைப்படத்தால் வைரலான சாம் காசிடி கூறுகையில், ‘‘இந்த அதிசயத்தை அனுபவித்ததற்காக எங்கள் ஜோடி பாக்கியம் செய்திருக்கிறது’’ என மகிழ்ச்சி தெரிவித்தார்.

Views: - 43

0

0