10 லட்சம் லைக்ஸ்களை குவித்த பிரதமர் மோடியின் போட்டோ! எங்கு போனார் தெரியுமா?

25 January 2021, 3:09 pm
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் பதிவிட்ட போட்டோ ஒன்று 10 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது. நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க கோல்கட்டா சென்ற அவரது புகைப்படத்துக்கு இவ்வளவு லைக்ஸ்கள் குவிந்துள்ளன.

சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் வலிமை தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேதாஜியின் 125வது பிறந்த நாளையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், நேற்று முன்தினம் (ஜனவரி 23 ஆம் தேதி) சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், பிரதமர் நரேந்திய மோடி கலந்து கொண்டார். இதில் பங்கேற்பதாக, 23ஆம் தேதி கோல்கட்டாவுக்கு விமானத்தில் வந்தார். விமானத்தில் இருந்து பிரதமர் மோடி இறங்கும் புகைப்படம், அவரது பேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவிடப்பட்டது.

அதன் கீழ், ‘நேதாஜி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க கோல்கட்டா வந்தடைந்தேன்’ என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த போட்டோவுக்கு, 24 மணி நேரத்திற்குள், 10 லட்சம் பேர், லைக்ஸ் எனப்படும், விருப்பம் தெரிவிப்பதற்கான அடையாளத்தை இட்டுள்ளனர். 14 ஆயிரம் பேர், இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். 47 ஆயிரம் பேர், ‘கமென்ட்’ எனப்படும், கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனது ஆட்சி காலத்தில் பல வெளிநாடுகளுக்கு பயணித்திருந்த போது, கொரோனா வைரஸ் பரவலால், விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக வெளிநாடு பயணங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின், அவர் மேற்கொண்ட இந்த விமான பயணத்துக்கு, நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Views: - 4

0

0