கோவிலில் கிடா வெட்டிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: வழக்கு தொடுத்த விலங்குகள் நல வாரியம்..!!

28 February 2021, 9:55 am
goat - updatenews360
Quick Share

ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் கோவிலில் ஆடு பலி கொடுப்பதற்காக ஆட்டின் தலையை வெட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் தியோலி-மஞ்சி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் பன்வர் சிங். சில நாட்களுக்கு முன்பு பரன் மாவட்டத்தின் கஸ்பத்தானா காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவிலில் பன்வர் சிங் பேரனுக்கு, மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தும் விழா நடந்தது.
அப்போது கோவிலில் ஆடு ஒன்று பலி கொடுக்கப்பட்டது. பன்வர் சிங் அரிவாளால் ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுத்தார். இது தொடர்பான 45 நிமிடங்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இதனை பார்த்த விலங்குகள் நல வாரிய அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். கோட்டா எஸ்.பி. சரத் சவுத்ரி, இந்த வீடியோ பதவின் அடிப்படையில் பன்வர் சிங் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பன்வர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் ஆடு பலியிட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 16

0

0