இதற்கு பெயர் தான் அதிர்ஷ்டம்! ரூ.2500க்கு வாங்கிய கிண்ணம் ரூ.3.6 கோடிக்கு ஏலம்

5 March 2021, 3:10 pm
Quick Share

அமெரிக்காவில் சின்ன கிண்ணம் ஒன்றை 35 டாலருக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி, அதனை ஆய்வு செய்த போது, அது 15ம் நூற்றாண்டின் ஒரு அரிய சீன கலைப்பொருள் என தெரியவந்தது. இதனையடுத்து அவர் அதனை விரைவில் ஏலம் விடப்போகிறார். இது அதிகபட்சமாக 5 லட்சம் டாலர் விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாங்கியது ரூ.2,500.. விற்கப்போவது ரூ.3.6 கோடி! சூப்பர்ல…

பிரிட்டனில் உள்ள கனெக்டிக்கட் பகுதியில் உள்ள கடையில், சிறிய கிண்ணம் ஒன்றின் வேலைப்பாட்டை பார்த்து அதிசயத்த ஒருவர் அதனை வெறும் 35 டாலர் கொடுத்து வாங்கி சென்றார். பின் அதனை ஆய்வு செய்ய அமெரிக்காவில் உள்ள சோத்பே நிறுவனத்துக்கு அதன் புகைப்படங்களை அனுப்பி வைத்தார். ஆய்வு செய்தவர்கள், கிண்ணத்தில் இருக்கும் கலை வண்ணம் மற்றும் ஓவியங்களை பார்த்து வியந்துள்ளனர்.

ஆய்வில் அந்த கிண்ணம், 15ம் நூற்றாண்டை சேர்ந்து அரிய சீன கலைப்பொருள் என உறுதி செய்யப்பட்டது. இதுபோல் உலகில் 7 கிண்ணங்கள் இருப்பதாகவும், இது ஒன்றை தவிர மற்றவை அனைத்தும் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் கலைப்பொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 15ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சி செய்தவர்கள் மிங் வம்சத்தினர். அவர்களின் ஆட்சி காலமே கிண்ணங்களின் பொற்காலமாக கருதப்படுகிறது. 1402 – 1424 காலகட்டத்தில் அவர்கள் ஆட்சி நடத்திய போத இந்த கிண்ணங்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய பொக்கிஷத்தை வரும் 17ஆம் தேதி சோத்பே நிறுவனம் ஏலத்தில் விட உள்ளது. சுமார் 3 லட்சம் டாலர் முதல் 5 லட்சம் டாலர் வரை இது விற்பனையாகும் என கலைப்பொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எல்லாருக்கும் இந்த மாதிரி அதிர்ஷ்டம் அமையுமா? வாங்கியவர் அதிர்ஷ்டசாலி தான் போங்க..

Views: - 4

0

0