பிரதமர் மோடியின் ஓவியம் – துபாய் மாணவருக்கு குவிகிறது வாழ்த்து!!

23 February 2021, 5:41 pm
Modui Painting - Updatenews360
Quick Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை ஓவியமாக வரைந்த துபாய் மாணவருக்கு, பிரதமர் மோடி, கடிதத்தின் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

கேரளாவை தாயகமாக கொண்ட குடும்பம், தற்போது துபாயில் வசித்து வருகிறது. அந்த குடும்பத்தில் உள்ள 14 வயது நிரம்பிய சரண் சசிக்குமார், அங்குள்ள நியூ இந்தியன் மாடல் பள்ளியில், 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர அனுதாபியான சரண் சசிக்குமார், 90 செ.மீ நீளம் மற்றும் 60 செ.மீ அகலத்தில், 6 அடுக்குகளாலான ஸ்டென்சில் முறையிலான ஓவியத்தை வரைந்து உள்ளார்.

ஜனவரி 26ம் தேதி நடந்த குடியரசு தின அணிவகுப்பில், பிரதமர் மோடி சல்யூட் அடிப்பது போல உள்ள பிரதமர் மோடியின் ஓவியத்தை, சரண் சசிக்குமார் வரைந்து இருந்தார். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனின் சமீபத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின்போது, இந்த ஓவியம் அவரிடம் வழங்கப்பட்டது.

தனது ஓவியம் வரைந்த மாணவர் சரண் சசிக்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதம், துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக, மாணவர் சரண் சசிக்குமாரிடம் வழங்கப்பட்டது.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாவது, இந்த ஓவியத்தின் மூலம், நீங்கள் இந்திய நாட்டின் மீது கொண்டுள்ள அன்பும், பாசமும் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் நீங்கள்,வருங்காலத்தில் உலகமே போற்றும் சிறந்த ஓவியராக வருவீர்கள். ஓவியக் கலையில் சிறந்த விளங்கும் நீங்கள், கல்வியிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே அன்பு கோரிக்கை என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Views: - 9

0

0