மரங்கள் மற்றும் தாவரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை பஞ்சாபில் துவக்கம்

23 February 2021, 1:55 pm
Quick Share

பஞ்சாப் மாநிலத்தில் அழுகிய மற்றும் ஆரோக்கியமற்ற தாவரங்கள் மற்றும் மரங்கள் சிகிச்சை பெறும்நோக்கில், ஐஆர்எஸ் அதிகாரி, பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளார்.


நாம் அனைவருக்கும், தோட்டங்கள் அமைத்து தாவரங்கள் வளர்ப்பது மிகவும் பிடித்தமான செயல் தான். நாம் மனச்சோர்வு அடையும் நேரத்தில், இயற்கையின் கொடையான இந்த தாவரங்களை பார்க்கும்போது நமது மனம் இலகுவாகி புத்துணர்வு அடையும். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி ரோஹித் மெஹ்ரா, மரங்கள் மற்றும் தாவரங்களின் வசதிக்காகவே, பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளார். இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ரோஹித் மெஹ்ரா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, 

மரங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படும்போது அவைகளால், தங்களது வலியை வெளியே சொல்ல முடிவதில்லை. இயற்கை நல ஆர்லவர்கள் இந்த வலியை புரிந்து கொண்டு, அவைகளுக்கு சிகிச்சையளிக்கும் விதமாக, இயற்கை நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து இந்த ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளோம். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸின் கூற்றை, இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

மரங்கள், தாவரங்கள் மற்றும் நாற்றுக்கள் உள்ளிட்டவைகளுக்கு வெவ்வேறு காலநிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு, தாங்கள் இந்த சேவையை துவக்கியுள்ளோம். இந்த சேவையின் மூலம், டிரான்ஸ்பிளான்டேசன் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால், இதனை, உலகின் முதல் தாவர மருத்துவமனை என்றே கூறலாம். மெஹ்ரா அமைத்துள்ள இந்த சேவையில், தாவரவியல் அறிஞர்கள், இயற்கை ஆர்வலர்கள், மரங்களின் நலம் விரும்பிகள் என பலர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Views: - 0

0

0