டிராக்டரில் ரிவர்ஸ் கியரில் பஞ்சாப் டூ டெல்லி! எதுக்கு போனார் தெரியுமா?

25 January 2021, 4:31 pm
Quick Share

டெல்லியில் நடக்கும் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக, விவசாயி ஒருவர், தனது டிராக்டரில் ரிவர்ஸ் கியரில் இயக்கி, பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்திற்காக சென்ற போது, அவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால், கடும் குளிரிலும் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசே வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்தது. ஆனால் அதனை நிராகரித்த விவசாயிகள், மூன்று சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதற்கு மத்திய அரசு உடன்படாத காரணத்தால், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி (நாளை), வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, 3 லட்சம் டிராக்டர்களில் டில்லியில் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால், டெல்லி எல்லையில் இருக்கும் காஜிப்பூருக்கு விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் படை எடுத்து வருகின்றனர்.

அதில் ஒரு விவசாயி, தனது டிராக்டரை ரிவர்ஸ் கியரில் இயக்கி, டெல்லிக்கு சென்று கொண்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு பயணிக்கும் அந்த விவசாயி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், டிராக்டரை ரிவர்ஸ் கியரில் இயக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 5

0

0