ராஜஸ்தான் சட்டசபையில் பேய் – 20 ஆண்டுகளில் 31 இடைத்தேர்தல்கள் : பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ வினோத கோரிக்கை

1 February 2021, 1:56 pm
Quick Share

ராஜஸ்தான் சட்டசபை 2001ம் ஆண்டில், இந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்ட பின், 200க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்களது முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னரே, தங்களது உயிரை இழந்துள்ளனர். எனவே, இங்கு யாகம் நடத்தப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கியான்சந்த் அகுஜா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டசபையில், நடப்பு எம்.எல்.ஏ.க்களாக இருந்த 4 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இதற்கான இடைத்தேர்தல், வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2000 -2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 27 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில், அங்கு கடந்த 20 ஆண்டுகளில், 31 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கியான்சந்த் அகுஜா, ஒரு விநோத கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது,  ராஜஸ்தான் சட்டசபையை, இந்த புதிய கட்டடத்திற்கு 2001ம் ஆண்டில் மாற்றிய நிலையில் இருந்து எதுவும் நல்லது நடைபெறவில்லை. முதல்வர் கெலாட் தலைமையில், இங்கு நெருப்பு வளர்த்து கடவுளை பிரார்த்திக்கும் வகையில் யாகம் மேற்கொள்ளப்பட வேண்டும்  அல்லது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 20 ஆண்டுகளில், தங்களது  5 ஆண்டுகால பதவிக்காலத்தை நிறைவு செய்யாத எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 200க்கும் மேல் கடந்துவிட்டது. ஒன்று அவர்கள் பதவியில் இருக்கும்போதே மரணம் அடைந்துிருப்பார்கள், 

இல்லையென்றால், குற்ற வழக்குகளில் சிக்கி சிறைத்தண்டனை பெற்றிருப்பர். இன்னும் சில பேர் எம்.பி.க்கள் ஆகி பார்லிமென்டிற்கு சென்றிருப்பர். இவர்களது இடங்கள் இன்னும் காலியாகவே உள்ளன.  கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கைலாஷ் திரிவேதி, நவம்பரில் பா.ஜ. எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி,டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ மாஸ்டர் பன்வாரிலால் மேக்வால் மற்றும் நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில், கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.
 
வாஸ்து தோஷம் காரணமா?

ராஜஸ்தான் சட்டசபை 2001ம் ஆண்டில், இந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்ட பின், 200க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்களது முழு பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னரே, தங்களது உயிரை இழந்துள்ளனர். எனவே, இங்கு யாகம் நடத்தப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. கியான்சந்த் அகுஜா தெரிவித்துள்ளார். இதை சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. மாநில சட்டசபையை சுத்தப்படுத்தும் விதமாக அங்கு யாகம் வளர்க்க வேண்டும். சட்டசபை கட்டடத்திற்கு அருகேயே, இடுகாடு உள்ளதால், சட்டசபை கட்டடத்திற்கு வாஸ்து தோஷம் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.


இந்த புதிய கட்டடத்தில், சட்டசபை மாறாமல் இருந்திருந்தால், அந்த 200 எம்எல்ஏக்கள் தங்களது பதவிக்காலத்தை முழுமையாக அனுபவித்து இருப்பர். அவர்கள் உடல்நிலையையும் சீராக இருந்து இருக்கும் என்று அகுஜா குறிப்பிட்டுள்ளார். சட்டசபையில் இருந்து வெளியேறும் ஏசி காற்று, அந்த இடுகாட்டுக்கே செல்கிறது.
முந்தைய பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில், இங்கு கலாஷ் இடம்பெற்றிருந்தது இதன்காரணமாக உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அந்த கலாஷ் அகற்றப்பட்டதால், உயிரிழப்பு மீண்டும் ஏற்பட துவங்கியுள்ளது. முதல்வர் அசோக் கெலாட், இந்த விசயத்தில் தொடர்ந்து தவறான நடைமுறைகளையே மேற்கொண்டு வருகிறார்.

வாஸ்து விவகாரத்தில், அவர் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முயல வேண்டும்.
முதல்வர் கெலாட், சட்டசபை கூட்டத்தொடரை,பெரும்பாலும் செவ்வாய்க்கிழமையே துவக்குகிறார். இந்த கிழமை, புதிய விஷயங்களை துவக்குவதற்கு ஏற்ற நாள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.


சட்டசபை கட்டடத்தில் பேய்?

ராஜஸ்தான் சட்டசபையில் பேய் வாசம் செய்வதாக 2018ம் ஆண்டில் இருந்தே பேச்சு நிலவி வருகிறது. சட்ட வல்லுனர்களும், இந்த கட்டடத்தில் பேய்கள்  இருப்பதாக விவாதித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. சட்டசபை கூட்டத்தொடரை, நண்பகல் 12 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று சில எம்எல்ஏக்கள், சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பேய் பயத்தை போக்க, இங்கு நிவர்த்தி நிகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேலும் சிலர் கோரியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, தனியாக விவாதம் நடத்த வேண்டும் என்று சபாநாயகர் கைலாஷ் மேக்வாலும் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பான கருத்து கேட்பதற்காக, 

சபாநாயகர் கைலாஷ் மேக்வாலிடம் IANS செய்தி நிறுவனம் முயன்றபோது, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்த மேக்வால், இதுபோன்றமூடநம்பிக்கைகள் விசயத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
கிறித்தவர்கள் இதை பேய்கள் என்றும், இஸ்லாமியர்கள் சாயா என்றும், இந்து மக்கள் பூதங்கள் என்றும், மனிதனுக்கு அப்பாற்பட்ட இந்த சக்தியை குறிப்பிடுகின்றனர். அந்த கட்டடத்தில் ஏதோ ஒன்று இருப்பது உறுதியாகி உள்ளது. நான் ஆரிய சமாஜ கொள்கைகளை பின்பற்றுபவன். எனவே இதுபோன்ற விவாதங்களிலிருந்து சிலர் விலகி இருப்பதே நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபல ஜோதிடர் தீபக் ஜோஷி கூறியதாவது, சட்டசபை கட்டடத்தில் பயங்கர வாஸ்து தோஷம் உள்ளது. கட்டடத்தின் வடகிழக்கு பகுதியில் இடுகாடு உள்ளது.மேலும் கட்டடத்தின் நுழைவுப்பகுதி தென்கிழக்கு திசையை பார்த்தவாறு உள்ளது. இது நல்ல விசயம் அல்ல.
முன்பு இடுகாடாக இருந்த இடத்திலேயே, தற்போது சட்டசபை கட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாகவங, எம்எல்ஏக்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது. மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை சிறிது அதிகரித்தோ அல்லது குறைத்தோ மாற்றம் செய்ய வேண்டும். 200 என்ற எண்ணில் உள்ள 2 எண், இந்த கட்டத்திற்கு சரியான நிலைத்தன்மையை அளிக்கவல்லதாக இல்லை என்று ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

தொடர் நிகழ்வுகள்

2017 -18ம் ஆண்டில், மண்டல்கார் தொகுதியில் உள்ள நத்வாரா எம்எல்ஏ கல்யாண் சிங் சவுகான் மற்றும் கீர்த்தி குமாரி, பதவியேற்ற 6 மாதங்களில் மரணம் அடைந்தனர். 2001ம் ஆண்டில், எம்எல்ஏக்கள் பீம்சென் சவுத்ரி மற்றும் பிகா பாய் மரணம் அடைந்தனர்.
2002ம் ஆண்டில், காங்கிரஸ் எம்எல்ஏ கிசான் மோத்வானி மற்றும் பா.ஜ. எம்எல்ஏ ஜகத் சிங் தைமா மரணம் அடைந்தனர்.
2003ம் ஆண்டில் எம்எல்ஏ ருபால் மீனா மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து முதல்வர் அசோக் கெலாட் அரசில் அங்கம் வகித்த அமைச்சர் ராம் சிங் வைஷ்ணோய், 2006ம் ஆண்டில் மரணம் அடைந்தார். அதே ஆண்டில் எம்எல்ஏக்கள் அருண் சிங் மற்றும் நாதுராம் ஆகாரி மரணம் அடைந்தனர்.

2008 முதல் 2013 மற்றும் 2013 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டம், நடப்பு எம்எல்ஏக்களுக்கு போதாத காலம் என்றே கூற வேண்டும். இந்த காலகட்டத்தில் முன்டாவார் தொகுதி எம்எல்ஏ தர்மபால் சவுத்ரி காலமானார். 2018ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரம் நடைபெற்ற போது, ராம்  கர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அப்போது 199 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இடைத்தேர்தல்கள்

2001 -2002ம் ஆண்டின் காலகட்டத்தில் மொத்தம் 5 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 4 இடைத்தேர்தல்கள், 2002ம் ஆண்டில் மட்டும் நடந்துள்ளன.
2003-2008ம் ஆண்டின் காலகட்டத்தில் 5 இடைத்தேர்தல் நடைபெற்று உள்ளன. 2004ல் ஒன்றும், 2005ல் ஒன்றும், 2009ல் 2 இடைத்தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. 2008-2013ம் காலகட்டத்தில் 2 இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் 2013-2018ம் ஆண்டில் 6 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. 2013ல் 2 இடைத்தேர்தல்களும், 2014ல் 4 இடைத்தேர்தல்களும் நடைபெற்று உள்ளன.

2000மாவது ஆண்டில், புதிய சட்டசபை கட்டட கட்டுமானப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, 7 இடைத்தேர்தல்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில சட்டசபையை, புதிய கட்டடத்திற்கு மாற்றியதாலேயே, இடைத்தேர்தல்கள் ராஜஸ்தானில் அதிகளவில் நடைபெறுவதாக,தேர்தல் ஆணைய அதிகாரியும்  கருத்து தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாது, யாகம் உள்ளிட்ட சிறப்பு சடங்குகளை மேற்கொண்டு அந்த கட்டடத்தில் உள்ள துர்வாசங்களை அகற்ற வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0