இந்த அரிய ஓவியம் எவ்வளவு விலை தெரியுமா? கேட்டா தலை சுத்திடுவீங்க!!

29 January 2021, 9:34 pm
Quick Share

பொட்டிசெல்லியின் அரிய ஓவியம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளது. எவ்வளவு என கேட்கிறீர்களா.. வெறும் 673 கோடி ரூபாய் தாங்க… என்ன தலை சுத்துதா…

இத்தாலிய ஓவியரும் மறுமலர்ச்சி கலைஞர் என அழைக்கப்படுவருமான சான்ட்ரோ பொட்டிசெல்லியின் ஓவியம் ஒன்று, நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இதில் உலக நாடுகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஓவியக் கலைஞரான பொட்டிசெல்லியின் ஓவியங்களில் தற்போது ஒரு டஜன் ஓவியங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

அவரது சிறந்த ஓவியங்களான, “வீனஸின் பிறப்பு” மற்றும் “ப்ரிமாவெரா” ஓவியங்கள் புளோரன்ஸ் உஃபிஸி கேலரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ், பொட்டிசெல்லியின், ‘யங் மேன் ஹோல்டிங் எ ரவுண்டல்’ என்ற ஓவியத்தை ஏலத்தில் விட்டனர்.

ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் ஆரம்ப விலையாக 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுக்க, அதன் விலை தொடர்ந்து எகிறியது. முடிவில் அந்த ஓவியம், 92.2 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் 6,72,94,47,500 ரூபாய். அதாவது 672.9 கோடி ரூபாய்.. அம்மாடியோவ் என வாய் பிளக்கிறீர்களா..

ஏலம் எடுத்தவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து ஏல நிறுவனம் கூறுகையில், ‘‘100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இந்த ஓவியம் ஏலம் போகும் என எதிர்பார்த்திருந்தோம். அதற்கும் குறைவாகவே ஏலம் போனது. இருப்பினும், உலகில் அதிக தொகைக்கு ஏலம் போன ஓவியங்களுள் இதுவும் ஒன்று’’ என்றார்.

Views: - 23

0

0