அம்மாடியோ…! ரூ.25 கோடிக்கு ஏலம் போன அபூர்வ டின்டின் ஓவியம்

14 January 2021, 9:34 pm
Quick Share

சீன டிராகன் ஒன்று முன் நிற்க, குடுவையிலிருந்து தனது நாயுடன் வெளிவரும் டின்டின் ஓவியம், ஆன்லைனில், 25 கோடிக்கு ஏலம் போய், அனைவரின் வாயிலும் விரல் வைத்துள்ளது. இந்த ஓவியம் வெறும் 34 சதுர சென்டிமீட்டர் அளவு மட்டுமே கொண்டது. அதாவது 13 இன்ச் அளவு..!

அம்புலிமாமா., பாப்பா மலர்., பால மித்ரா., அணில் காமிக்ஸ் மட்டுமே படித்த நம்மவர்கள் பலரையும், தனது சாகச பயணத்தால் தன் பக்கம் இழுத்து சென்ற பெருமை டின்டின்னுக்கு உண்டு. 1930 ஆம் ஆண்டு முதலேயே, டின்டின் சாகசங்கள் சிறியவர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு வயதினரையும் மகிழ்வித்தன.

இந்நிலையில், 1936 ஆம் ஆண்டில் வெளியான டின்டின் புத்தகமான “தி ப்ளூ லோட்டஸ்” அட்டைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு டின்டின் ஓவியம் ஆன்லைனில் ஏலத்தில் விடப்பட்டது. சிறிய ஓவியமான அது, 34 சதுர சென்டி மீட்டர் (13 இன்ச்) அளவு மட்டுமே கொண்டது. டின்டின் மற்றும் அவரது நாய் ஸ்னோவி ஒரு பீங்கான் குடுவையிலிருந்து வெளிவர, அதன் எதிரே, சீன டிராகன் ஒன்று அச்சுறுத்தும்படி நின்றிருக்கிறது.

2.8 மில்லியன் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஓவியம், முதலில் நவம்பர் மாதம் விடப்படும் என கூறப்பட்டது. அது மாற்றி அமைக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது. ஆன்லைனில் நடந்த இந்த ஏலத்தில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், இந்த ஓவியம், இந்திய மதிப்பில் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. என்ன வாயை பொளந்திருப்பீங்களே…!

Views: - 7

0

0