தயாராகிவிட்டது “தங்க பர்கர்” – என்ன விலை தெரியுமா?

31 December 2020, 12:14 pm
Burger-Updatenews360
Quick Share

மேற்கத்தியத் துரித உணவுகள் இன்று இந்தியாவிற்கு ஊடுருவிட்டது. மக்கள் அந்த உணவுகளின் மீது அதிக நாட்டம் காட்டுகின்றனர். அவைகள் ஆரோக்கியத்தைக் கெடுப்பது எனத் தெரிந்தும் அந்த வகை உணவுகளின் விற்பனை குறையவில்லை. அந்த வகை உணவுகளின் முக்கியமானது பர்கர்.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் பர்கருக்கு பயங்கரமான மவுசு இருக்கிறது. கடைகளில் பல வகைகளில் பர்கர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ10 முதல் ரூ500 வரை வித விதமான பர்கர்கள் உள்ளன. ஆனால் நீங்கள் ஒரே பர்கர் சுமார் 4 ஆயிரம் விலைக்கு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த விலையில் ஒரு பர்கர் இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள ஓரோ மெக்காய் என்ற உணவகம், தங்கள் உணவகத்தில் 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட பர்கரை 57 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேல்) விற்பனை செய்கின்றனர். தங்க மூலம் பூசப்பட்டதால் தான் அந்த விலையாம். வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இப்படி ஒரு பர்கரை அவர்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து அந்த உணவக செஃப் கூறும் போது : “இந்த ஹேம் பர்கரை நாங்கள் தங்க முலாம் பூசித் தயாரித்துள்ளோம். தங்கத்தைச் சாப்பிடும் பொருளாக மாற்றி அதைத் தான் முலாம் பூசுகிறோம். அதனால் இந்த தங்கத்தைச் சாப்பிடுவதால் எந்த வித பிரச்சனையும் இல்லை” எனக் கூறினார்.

உலகம் முழுவதும் கெரோனா பரவல் காரணமாக உணவக தொழில் மோசமாகிவிட்டது. தற்போது மீண்டும் உணவகங்கள் திறந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க உணவகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன, அதில் ஒன்று தான் இது.

Views: - 50

0

0