லேப்டாப் சார்ஜர் சூட்டில் தயாரான குக்கீஸ் : நெட்டிசன்கள் வியப்பு

16 January 2021, 1:32 pm
charger Cookies - Updatenews360
Quick Share

குக்கரில் குக்கீஸ் செய்து பார்த்திருப்பீர்கள்.. சூடான லேப்டாப் சார்ஜரில் குக்கீஸ் செய்து பார்த்திருக்கிறீர்களா… பெண் ஒருவர் தனது லேப்டாப் சார்ஜரில் குக்கீஸ் செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இப்போது இந்த புகைப்படம் தான், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மிகவும் சுவையாக இதை தயார் செய்வது எப்படி என யூடியூப்பில் தேடி, அதனை மைக்ரோ ஓவன் அல்லது குக்கரில் தயார் செய்து தனது குழந்தைகளுக்கு தர இல்லத்தரசிகள் என்றும் விருப்பம் கொள்வர். அப்படி இல்லாமல், சூடான தனது லேப்டாப் சார்ஜரை பயன்படுத்தி, பெண் ஒருவர் குக்கீஸ் தயார் செய்து வியக்க வைத்துள்ளார்.

மியா_மியா என்ற டுவிட்டர் பயனர் ஒருவர் தனது பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் லேப்டாப் சார்ஜர் சூடாகி இருந்த போது, அதன் மேல் வைத்து குக்கீஸை ரெடி பண்ணியிருக்கிறார். குக்கீஸ் தயாராவதற்கு முன்பிருந்த புகைப்படத்தையும், தயாரான பின்பு இருந்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டார்.

இதனை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த குக்கீஸ் எப்படி இருக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார். முதல்படம் சார்ஜரின் மேல் இருந்த மாவாக இருந்த குக்கீஸையும், இரண்டாவது படம் தயாரான குக்கீஸையும் காட்டுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் தங்களது புருவத்தை உயர்த்தி அதனை வைரலாக்கி உள்ளனர்.

ஒரு பயனர், ‘அடுத்த முறை, மாவின் கீழ் ஒரு பேப்பரை வைக்கவும். குக்கீஸ் சூப்பரக வரும். மேலும் உங்கள் சார்ஜரிலும் ஒட்டாது’ என பதிவிட்டுள்ளார். என்ன வொர்க் பிரம் ஹோம் காரணமாக உங்கள் லேப்டாப் சார்ஜ் சூடாகிறது என புலம்புகிறீர்களா.. நாம் ஆம்லேட் தயார் செய்து பார்ப்போமா..

Views: - 4

0

0