ரியல் லைப் பாகுபாலி! பைக்கை எப்படி தூக்குறார் பாருங்க..

27 January 2021, 7:34 pm
Quick Share

அதிக எடை கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை, தொழிலாளி ஒருவர் தலையில் தூக்கி வைத்து, அதனை பஸ்சில் ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அவரை ரியல் லைப் பாகுபலி என புகழ, சிலர் அவரது அவல நிலையை கண்டு மணம் வெதும்பினர்.

பாகுபலி படத்தில் வரும் கதாநாயகனான பிரபாஸ், சிவன் சிலையை தனது தலையில் வைத்து தூக்கி சென்று அதனை அருவியின் கீழ் வைப்பார். பார்த்தால் புல்லரிக்கும் இந்த காட்சி, முழுக்க முழுக்க விஎப்எக்ஸ் காட்சி ஆகும். இதுபோன்ற ஒரு செயலை கண்டிப்பாக மனிதால் செய்ய முடியாது. ஆனால் அது தவறு என நிரூபிக்கிறது ஒரு வீடியோ.

சமூக வலைதளங்களில் 15 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், தினசரி கூலி தொழிலாளியாக தெரியும் ஒரு நபர், பஸ்சில், பைக்கை ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அந்த பைக்கை தன் தலையில் தாங்கி, அலேக்காக தூக்கி செல்கிறார். இதற்காக அவர் எந்த உதவியையும் நாடாமலேயே செய்கிறார். இந்த வீடியோவை 2 லட்சத்தி 50 ஆயிரத்துக்கும் அதிமானோர் பார்த்துள்ளனர். பலரும் இவரை நிஜ வாழ்க்கையின் பாகுபலி எனவும், சக்திமான் எனவும் பாராட்டி வருகின்றனர். ஒருவர் இவரை ரஜினிகாந்தின் ரசிகராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

அந்த பைக்கின் எடை 150 கிலோ வரை இருக்கும். இந்தியர்களின் வலிமையை பாருங்கள் என பகிரப்பட்ட இந்த வீடியோவில் இருக்கும் தொழிலாளிக்காக பலரும் வருந்தினர். இந்த வேலைக்காக அவர் குறைந்தபட்ச கூலியை கூட பெறமாட்டார் எனவும், இதனை காணும்போது வருத்தமாக இருக்கிறது எனவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோன்ற வீடியோ ஒன்று கடந்த ஜூன் மாதம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0