ரிஹானா குறித்து நெட்டில் தேடும் இந்தியர்கள்! எதை தேடியிருக்காங்க பாருங்க?

5 February 2021, 8:09 pm
Quick Share

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்ட, பாப் பாடகி ரிஹானா குறித்து இந்தியர்கள் கூகுளில் தேடி வருகின்றனர். அனைவரும் சொல்லி வைத்தால்போல, ரிஹானாவின் மதம் குறித்தும், அவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரா என்றும் அதிகம் தேடி உள்ளனர்.

விவசாய சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை பகிர்ந்து, இதுகுறித்து நாம் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறோம்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனையடுத்து அவரது கருத்து வைரல் ஆனது. சச்சின், கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க டுவிட்டர் கொளுந்து விட்டு எரிய துவங்கியது. ரிஹானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சச்சின் மீது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ரிஹானா குறித்து கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப்பிலிருந்து அதிகம் சர்ச் செய்கின்றனர்.

ரியானா யார் என்ற வழக்கமான தேடல்களுக்கு மத்தியில், ரிஹானா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவரா?, ரிஹானா பாகிஸ்தானை சேர்ந்தவரா?, ரிஹானாவின் மதம் என்ன? என தேடி வருகின்றனர். இதனை கூகுள் ட்ரெண்ட்ஸ் தெரிவித்துள்ளது. வேலைனு வந்துட்டா நம்ம பயலுக வெள்ளைக்காரன் தான் போங்க

Views: - 0

0

0