பாட்டு கேட்ட மாதிரியும் ஆச்சு! ரூல்சையும் மதிச்ச மாதிரி ஆச்சு!

27 January 2021, 8:24 pm
Quick Share

அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்று தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘ஸ்பேஷ் பபுள்ஸ்’ உதவியுடன் சமூக இடைவெளியை கடைபிட்டதபடி, நேரடியாக இந்த இசை நிகழ்ச்சியை இசைப்பிரியர்கள் பலரும் கண்டு ரசித்துள்ளனர்.

கொரோனாவால் உலக மக்கள் தங்களது பல்வேறு இயல்புகளை மாற்றி கொண்டுள்ளனர். மாஸ்க் அணியாமல் வெளியே செல்வதில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கையை அடிக்கடி சுத்தம் செய்வது என மக்கள் தங்களது இயல்புகளாக மாற்றிக் கொண்டுள்ளனர். உலகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாலும், கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான், தாங்கள் கொரோனா அரக்கனிடம் சிக்காமல் இருப்போம் என உறுதியாக நம்புகின்றனர்.

அமெரிக்காவில் சொல்லவே வேண்டாம். தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவில் சிக்க பலர் பலியாகி கொண்டே இருக்கின்றனர். இதனால், நாடே பீதியில் உறைந்து போய் இருக்கிறது. இந்நிலையில், ஒக்லஹாமாவில், அந்நாட்டின் பிரபல இசை பாண்ட் ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தி பிளேமிங் லிப்ஸ் என்ற இசைக்குழு, தங்களையும், தங்கள் இசைக்கச்சேரியை காண வந்தவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, ‘‘ஸ்பேஷ் பபுள்ஸை’’ கொண்டு பாதுகாத்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து, பலூனுக்குள் ஒருவர் என பாதுகாப்பாக இருந்து கொண்டு இசைக்கச்சேரியை நடனமாடியபடி கண்டு ரசிக்கின்றனர். இசைக்குழுவினரும் பலூனுக்குள் இருந்தபடி, தங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பலூனுக்குள்ளும், ஒரு ஸ்பீக்கர், மின்விசிறி, தண்ணீர் பாட்டில், துண்டு ஆகியவை இருந்தன. அதில் ஒரு பேப்பரில் நான் செல்ல வேண்டும் எனவும், சூடாக இருக்கிறது எனவும் எழுதப்பட்டிருந்தது. பலூன் சூடானால், அந்த பேப்பரை பணிப்பெண்களிடம் காட்டினால் போதும். அவர்கள் குளிர்ந்த காற்றை பலூனுக்குள் நிரப்புவார்கள். ஒருவேளை இசை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற விரும்பினால், நான் செல்ல வேண்டும் என எழுதப்பட்டிருக்கும் பேப்பரை காட்டினால் போதும். அவர் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்.

உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வந்த சூழலில், தி பிளேமிங் லிப்ஸ் குழுவினரின் இந்த வித்தியாச முயற்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Views: - 0

0

0