“எனக்கு “மிஸ்டர் பீன்” பிடிக்காது…” சொன்னதும் மிஸ்டர் பின் தான்

Author: Udayaraman
5 January 2021, 9:11 pm
Quick Share

ரோவன் அட்கின்சன் இந்த பெயரைக் கேட்டால் பலருக்கு யார் என்று தெரியாது. ஆனால் இவரது ரீல் பெயரைக் கேட்டால் தெரியாதவர்களே இருக்க முடியாது. இவரது ரீல் பெயர் மிஸ்டர் பீன். உலக அளவில் மிஸ்டர் பீன் என்ற தொடரில் நடந்து பிரபலமானவர். தற்போது 65 வயதாகும் ரோவன் அட்கின்சன் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்குப் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் தனக்கு மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடித்தது பிடிக்கவில்லை என்றும் தான் நடித்த பிளாக்அடேர் கதாபாத்திரம் பிடித்திருக்கிறது எனப் பேட்டியளித்துள்ளார்.

பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “பிளாக்அடேர் கதாபாத்திரத்தில் நான் பெரிதாக எந்த பொறுப்பும் உணரவில்லை.ஆனால் மிஸ்டர் பீன் நடிக்கும் போது எப்பொழுதும் எதாவது செய்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்தது. இது பெரும் தலைவலியாக இருக்கும். ஆனால் மிஸ்டர் பீன் மிகப்பெரிய வெற்றி பெரும் எனக்கு முன்பே தெரியும் பொதுவாக வளர்ந்த ஒருவர் சிறுபிள்ளைபோல நடந்து கொள்வது மிக காமெடியான விஷயம் தான். ஆனால் அதைச் செய்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் பலநேரங்களில் எரிச்சிலடைந்துள்ளேன். ஆனால் நடிக்கும் போது மிகக் கவனமாக இருந்தேன். அந்த தொடர் முடிவும் வரை அதே மன நிலை தான் எனக்கு இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த பேட்டியில் அவர் சமூகவலைத்தளங்களில் பெருகி வரும் கேன்சல்கல்சர் குறித்துப் பேசியுள்ளார். சேன்சல் கல்சர் என்றால் ஆன்லைனில் ஒருவரைத் தூற்றுவதாகும். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில்இவ்வாறாக ஒருவரை வரைமுறையின்றி வசைபாடுவது அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தில் சென்று முடியும் என இவர் தெரிவித்துள்ளார்.

Views: - 47

0

0