நானோ காருக்கு ரூ.91,000 பார்க்கிங் கட்டணம்! அதோட விலையே அவ்ளோ தானே!

30 January 2021, 5:39 pm
Nano Car - updatenews360
Quick Share

நிர்கதியாக டாடா நானோ காரை நிறுத்தி வைத்திருந்த அதன் உரிமையாளராக வக்கீலுக்கு, பார்க்கிங் கட்டணமாக மட்டும், 91 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விலையே அவ்ளோ தானே என உங்களுக்கு தோன்றுகிறதா!

ரத்தன் டாடாவின் கனவு திட்டத்தில் உருவானது தான் நானோ கார். குறைந்த விலையில் கார் தயாரிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறைவான விலை, சிறிய உருவம், அழகிய நிறங்கள் என பல அம்சங்களுடன் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரின் விலை ரூ.115,000 ஆக இருந்தது.

தற்போது அதன் விலையை நெருக்கி, கார் பார்க்கிங் கட்டணமாக மட்டுமே கட்டப்போகிறார் இந்த வக்கீல். குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்தவர், சோனா சாகர். பெண் வக்கீலான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது டாடா நானோ காரை, ஹர்சோலியா பிரதஸ் என்ற டாடா வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையத்தில் விட்டிருக்கிறார். ரிப்பேர் செய்யப்பட்டதற்கு பில்லாக ரூ.9,900 கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள் கூற, வாக்குவாதம் செய்த அந்த வக்கீல், காரை எடுக்காமல் சென்றுவிட்டார்.

நிர்கதியாக நின்ற அந்த கார் கடையிலேயே நிற்க, 2019 ஆம் ஆண்டு, காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வாயிலாக ரிப்பேர் நிறுவனத்துக்கு சோனா நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், ரிப்பேர் நிறுவனம் முறையாக செயல்படவில்லை எனவும், நானோ காரை முழுமையாக ரிப்பேர் செய்து, அந்த நிறுவனம் அவரிடம் திருப்பித்தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த ஹர்சோலியா பிரதர்ஸ் நிறுவனம், காரை எடுத்து செல்லும்படி 58 மெயில்கள் அனுப்பியதாகவும், அதற்கு சோனா பதிலளிக்கவில்லை எனவும் கூறியிருந்தது. மேலும், காரை நிர்கதியாக நிப்பாற்றி சென்றதற்கு பார்க்கிங் கட்டணமாக, ஒரு நாளைக்கு 100 ரூபாய் என, 910 நாட்களுக்கு ரூ.91,000 வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் விட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், சோனா சாகர், பார்க்கிங் கட்டணமாக, ரூ 91000 செலுத்தவேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும், பார்க்கிங் கட்டணத்துடன், கூடுதலாக சர்விஸ் சார்ஜ் ரூ.3,500 வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் நொந்து போய் உள்ளார் அந்த வக்கீல்!

Views: - 0

0

0