ஆசையாய் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த பரிதாபம்: அடுத்தடுத்து மயங்கி விழுந்த 18 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை..!!

Author: Rajesh
2 May 2022, 3:25 pm
Quick Share

கேரளா: ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் என்ற இடத்தில் உள்ள ஐடில் கூல் பார் என்ற கடை செயல்பட்டு வருகிறது. ள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது, இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த கடையில், கான்ஹாகட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவநந்தா என்ற மாணவி ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இவர் காசர்கோடு மாவட்டம் கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்துள்ளார். சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உள்பட 30- க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கெட்டுப்போன சிக்கன் ‘ஷவர்மாவை’ சாப்பிட்டதால் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கடை உடனடியாக அடைக்கப்பட்ட நிலையில், கடையில் பணிபுரியும் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் கடை உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.

ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷவர்மா எனப்படுவது ரொட்டிக்குள் கோழி இறைச்சித் துண்டுகள், முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள் சேர்த்து வைத்து பரிமாறப்படும் உணவு.

பெரும்பாலும் இந்த க்ரில்கள் திறந்த வெளியில் தான் இருக்கின்றன. அதுவும் வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் சாலையில் இருந்து எழும் தூசிகளுக்கு மத்தியில் இந்த வகை உணவு சாதாரணமாகவே கிருமிகளைக் கொண்டிருக்கும் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், துரித உணவுகளில் பயன்படுத்தும் இறைச்சியின் தரமும், அவை சுத்தப்படுத்தப்படும் முறையும், எத்தனை டிகிரியில் வேகவைக்கப்படுகிறது என்ற அளவும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டிய விஷயம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.

Views: - 781

0

0