கண்ணைக்கவரும் ஆரஞ்சு நிறத்தில் வவ்வால்! புதிய இனம் கண்டுபிடிப்பு

19 January 2021, 8:43 pm
Quick Share

மேற்கு ஆப்ரிக்காவில், வவ்வாலின் புதிய இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கண்கைக்கவரும் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிற வண்ணத்தில் உள்ளது. புதிய இனத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த இயற்கை அருங்காட்சியகம் மற்றும் பேட் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, மலைகளின் பழைய சுரங்க சுரங்கங்களில், புதிய இனங்கள் ஏதேனும் வாழ்கின்றனவா என கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. அப்படி, மேற்கு ஆப்ரிக்காவின் கினியாவில் உள்ள நிம்பா மலைகளிலிருந்த குகைகள் மற்றும் சுரங்கங்களில் ஆய்வு செய்த போது, புதிய வவ்வால் இனம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த வவ்வால் ஆரஞ்சு கலந்த கருப்பு நிறத்தில் உள்ளது. இந்த புதிய வவ்வால் இனம் ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் வேறு எந்த பகுதிகளிலும் இந்த மாதிரியான வவ்வால்கள் காணப்படுவதில்லை என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், அழிந்து வரும் ஒரு இனத்தில் புதிய வகையினம் கண்டுபிடிக்கப்பட்டது புதிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

கண்ணைக்கவரும் இந்த வவ்வால் இனம், பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் ரோமங்களை கொண்டுள்ளது. புதிய இனம் என்பதால், வேறு தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை என தெரிவித்துள்ள விஞ்ஞானிகளில் ஒருவர், ‘ஒரு புதிய பாலூட்டியை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சிறுவயதில் இருந்தே என்னுடைய கனவு தற்போது நனவாகி உள்ளது’ என்றார். அமெரிக்கன் மியூசியம் நோவிடேட்ஸ் இதழில் இந்த இனம் முதல் முறையாக விவரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து தான் பரவியது என நம்பப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய வகை வவ்வால் இனம் வேறு ஏதேனும் நோயை உலகிற்கு பரப்பாமல் இருந்தால் சரி என்கிறீர்களா…

Views: - 4

0

0