திமிங்கலத்தின் வயிற்றில் இருக்கும் சிசுவின் சோனோகிராம் வீடியோ! லைக்ஸ் அள்ளுது

14 January 2021, 7:34 pm
Quick Share

நீர்வாழ் உயிரினங்களுக்கான அருங்காட்சியகம் ஒன்று, கர்ப்பமாக இருக்கும் திமிங்கலத்தின், வயிற்றில் இருக்கும் சிசுவின், சோனோகிராம் வீடியோவை வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது.

கர்ப்பம் ஒரு மகிழ்ச்சியான பயணம். தங்கள் சோனோகிராம் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றி, பலரும் தங்கள் மகிழ்ச்சியை உலகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இதையே கடல் வாழ் உயிரினங்கள் செய்தால், நெட்டிசன்களின் மனதை கவர முடியுமா? அப்படி கவர்ந்திழுத்திருக்கிறது திமிங்கலம் ஒன்று.

சான் ஆன்டோனியாவை சேர்ந்த நீர்வாழ் உயிரினங்களுக்கான அருங்காட்சியகம் ஒன்று, தங்களது பெலுகா திமிங்கலம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து, கருவின் சோனோகிராம் வீடியோவை வெளியிட்டது. தங்களது பணியாளர்கள், உலக தரத்தில், நீர்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதாக தெரிவித்துள்ள நிர்வாகம், அதனால், தங்களால் சிறப்பாக பயிற்சி அளிக்க முடியும் என கூறியுள்ளது. கால்நடை மருத்துவர்களால், உடல்நலன் பரிசோதனை அடிக்கடி செய்யப்படுகிறது. இதனால், திமிங்கலம் ஒத்துழைத்து, சாத்தியமில்லாத இந்த வீடியோவை எடுக்க அனுமதித்துள்ளது என பெருமையுடன் தெரிவித்துள்ளது.

லூனா என்ற இந்த பெலுகா திமிங்கலம் முழு கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ள அருங்காட்சிய அதிகாரிகள், இது லூனாவுக்கு 4வது கர்ப்பம் என்றும் தெரிவித்துள்ளனர். லூனாவின் முதல் குட்டி, 2010 ஆம் ஆண்டு பிறந்தது. அட்லா என பெயரிடப்பட்ட இது, செயற்கை கருவூட்டலுடன் பிறந்த முதல் பெலுகா திமிங்கலம் ஆகும். அட்லாவை ஏற்க மறுத்த லூனா, தனது 2வது குட்டியான சாம்சனை ஏற்றுக் கொண்டு அதனை வளர்த்தது.

அந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை குவித்து வரும் நெட்டிசன்கள், லூனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

Views: - 6

0

0