படிப்பு மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தை பாருங்க! ஏடிஎம்.,க்கு கீழே படிக்கும் படிப்பாளி!

15 April 2021, 5:14 pm
Quick Share

ஏடிஎம் மிஷினுக்கு கீழே அமர்ந்து செக்யூரிட்டி ஒருவர் படிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படிப்பில் ஆர்வம் கொண்டிருக்கும் அந்த செக்யூரிட்டிக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கல்வி கற்பதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. சமீபத்தில் வைரலாகி இருக்கும் புகைப்படம் அதனை தெளிவுபடுத்தி இருக்கிறது. ஏடிஎம் கவுண்டரில் பாதுகாப்பு காவலர் ஒருவர், தரையில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கும் புகைப்படம் தான் அது. செக்யூரிட்டி தரையில் அமர்ந்து புத்தகம் படிக்கும் புகைப்படத்தை, ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஆனால், அந்த செக்யூரிட்டியின் விவரங்களும், அது நிகழ்ந்த இடம் குறித்த தகவல்களையும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த புகைப்படம் உடனடியாக வைரலாகி, நெட்டிசன்களை பாராட்ட வைத்துவிட்டது. அடிப்படை கல்வி உரிமைக்காக மிகவும் கடினமாக உழைக்கும் எளிய மக்களை பிரதிபலிக்கிறது என பலரும் அந்த செக்யூரிட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலரும் இதுபோன்று கடின சூழலில் படிக்கும் புகைப்படங்களை கமெண்ட்ஸ் பிரிவில் பதிவேற்றினர்.

மக்கள் தங்கள் கல்வியைத் தொடர, எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை இன்டர்நெட் நமக்குக் காண்பிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜே.என்.யூ பல்கலையில் பாதுகாவலாக இருந்த ராம்ஜால் மீனா, கடுமையாக படித்து அங்கு நடந்த நுழைவு தேர்வில் வெற்றி பெற்று, மாணவராக சேர்ந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

Views: - 17

0

0