படை நடுங்கும் பாம்புகளுக்கு நடுவே எப்படி உட்கார்ந்திருக்கார் பாருங்க!

8 February 2021, 3:02 pm
Snake Man - Updatenews360
Quick Share

பெரிய பெரிய மலைப் பாம்புகளுக்கு நடுவே, ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்கள் ஒரு மணி நேரம் இப்படி உட்கார்ந்தால் உங்களுக்கு 50 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றாலும் உட்காருவீர்களா? என பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவை பார்த்து நெட்டிசன்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதுவே பெரிய பெரிய மலைப் பாம்புகள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி பல பெரிய மலைப் பாம்புகளுக்கு நடுவில் ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோவை அக்குவாலேடி என்ற டுவிட்டர் பயனர், தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், 50 மில்லியன் டாலர் தருகிறேன் என அறிவித்தாலும், இப்படி மலைப் பாம்புகளுக்கு நடுவே ஒரு மணி நேரம் உட்கார முடியுமா என்ற பதிவுடன் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் எடுக்கப்ட்டுள்ளது. அந்த ஜூவின் நிறுவனர், ஜே புரூவர் தான் பாம்புகளுக்கு நடுவே உட்கார்ந்திருக்கிறார்.

வீடியோவில் மலைப் பாம்புகளுக்கு நடுவே ஜாலியாக அவர் பேசிக் கொண்டு இருக்கிறார். மஞ்சள், பச்சை, வெளிர் நிறம் என பல வண்ணங்களில் ஊர்ந்து திரியும் மலைப் பாம்புகளை வீடியோவில் கண்ட நெட்டிசன்கள், அந்த தில்லான மனிதரை கண்டு வியப்பில் புருவத்தை உயர்த்தி உள்ளனர். 12 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவின் முடிவில், ஊர்ந்து கொண்டிருக்கும் மலைப் பாம்புகள் சில, புரூவரின் தலையில் விழுகின்றன. அதை காண்கையில், நமக்கே சற்று பதறித்தான் போகிறது.

இந்த வீடியோவை டுவிட்டரில் மட்டும் 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். 1,300க்கும் அதிகமானோர் ரீடுவிட் செய்துள்ளனர். 3,800க்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். சிலர் ‘வாய்ப்பே இல்ல ராஜா’ எனும்படி கருத்துக்கள் பதிவிட, ஒருசிலர், 50 மில்லியன் டாலர் தந்தால், ஆண்டு முழுவதும் இப்படி பாம்புகளுக்கு மத்தியில் வாழ தயார் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நம்மால முடியாதுப்பா என சொல்லும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்கிறது!!

Views: - 0

0

0