நம்புங்க…இது மீனின் பற்கள் தான்: இணையத்தை ஆச்சர்யப்படுத்தும் மீனின் புகைப்படம்..!!

Author: Aarthi Sivakumar
6 August 2021, 5:43 pm
Quick Share

அமெரிக்காவில் மனிதர்களைப் போன்ற பற்கள் கொண்ட மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு மீனின் புகைப்படத்தை ஜென்னட்டி பியர் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த மீனின் புகைப்படத்தை கண்ட பலரும் ஆச்சரியத்தில் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

அப்படி என்னதான், அந்த இருக்கிறதென்றால் அதன் பற்களை அச்சு அசலாக மனிதனின் பற்களை போலவே அமைந்திருப்பது தான். இது என்ன வகையான மீன் என பலரும் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து, இது ஷிப்ஷீட் எனப்படும் ஒருவகை மீன் என சிலர் விளக்கமளித்துள்ளனர்.

கடினமான இரையை நசுக்கி உண்ண ஷிப்ஷீட் மீன்களுக்கு இப்பற்கள் உதவுகிறதாம். இந்த மீன் தொடர்பான புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Views: - 221

0

0