வெல்கம் டு 2021! சஹாரா பாலைவனத்தை போர்த்திய பனிப்போர்வை!

19 January 2021, 9:46 pm
Quick Share

உலகின் மிக வெப்பமான பாலைவனமான சஹாரா பாலைவனத்தில், பனிப்போர்வை போர்த்தியிருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக ஆண்டு துவங்கும் ஜனவரி மாதம், உலகின் பெரும்பாலான பகுதிகளில் பனி பெய்யும். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பாலைவனங்களில் பனிப்பொழிவு இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், 2021ஐ வரவேற்கும் விதமாக, ஒரு வினோத நிகழ்வு சஹாரா பாலைவனத்தில் நிகழ்ந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம் என்று சொன்னதும் நம் கண்முன்னே விரிவது அடர்ந்து விரிந்த மணல்திட்டுகளும், சுட்டெரிக்கும் வெயிலும்தான். ஆனால் தற்போது, சஹாராவின் சுடும் மணல் பரப்பு முழுவதும, வெண்பனி போர்வை போல் போர்த்தி காணப்படும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

ஜனவரி 13 அன்று அல்ஜீரியாவின் பாலைவன நகரமான ஐன் செஃப்ராவுக்கு அருகில் இந்த கண்களை கவரும் புகைப்படங்களை, கரீம் பவுச்சிசேட்டா என்ற புகைப்படக்கலைஞர் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட, அது வைரலாக பரவி வருகிறது.

சஹாரா பாலைவனத்தின் வெப்பநிலை, பொதுவாக 25 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால் மாறிவரும் வானிலை காரணமாக, அதை வெப்பத்தை, தண்மையாக மாற்றி தற்போது வெப்பநிலை மைனஸ் 3 டிகிரியை எட்டியுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் அங்கு இல்லாத குளிர் நிலை ஆகும்.

சவுதி அரேபியாவின் சில பகுதிகளிலும் லேசான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதனை அங்கு வசிக்கும் மக்கள், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அனுபவித்து வருகின்றனர். போர்ப்ஸ் அறிக்கையின்படி, கடந்த 37 ஆண்டுகளில் இந்த அரிய நிகழ்வு, மூன்று முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. கடந்த 1979, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. ஒருவேளை

Views: - 5

0

0