சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி தெரியும், இது என்ன ஸ்ட்ராபிரியாணி – வாருங்கள் தெரிந்து கொள்வோம்

23 February 2021, 3:07 pm
Quick Share

பிரியாணியின் மீது ஸ்ட்ராபெர்ரி பழங்களை அலங்கரித்து ஸ்ட்ராபிரியாணி என்று வர்ணிக்கப்படும் செய்தி தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

பிரியாணியை இந்த உலகில் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. சமூகவலைதளங்களில், ஸ்ட்ராபிரியாணி என்ற பாகிஸ்தானியரின் பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது, விவாத பொருளாகவும் மாறியுள்ளது.பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், சமூகவலைதளங்களில், பிரியாணியின் மீது ஸ்ட்ராபெர்ரி பழங்களை பரப்பி அலங்கரித்த வகையிலான போட்டோக்களை பகிர்ந்து இருந்தார். இந்த போட்டோக்கள் குறித்து சிலர் நல்லவிதமான கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில், பெரும்பாலானோர், அதை நிந்திக்கும் வகையிலான கருத்துகளையே தெரிவித்து இருந்தனர்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரத்தை சேர்ந்த சாத் என்ற இளைஞர், இன்று தங்கள் வீட்டில் ஸ்ட்ரா பிரியாணி செய்து மகிழ்ந்தோம் என்று பிரியாணியின் மீது ஸ்ட்ராபெர்ரி பழங்களை பரப்பி அலங்கரித்த வகையிலான போட்டோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, டுவிட்டர் ண்பர்களே, இதுதொடர்பாக, தங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் என்று தலைப்பிட்டு இருந்தார்.
சாத், இந்த போட்டோவை, டுவிட்டரில் பதிவிட்ட சில மணிநேரங்களில் அது வைரலாகி வந்தது.

பலர், இந்த போட்டோவிற்கு கலவையான தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது பிரியாணிக்கு செய்யும் அவமதிப்பு நடவடிக்கை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் இதற்கு வேடிக்கையான மீம்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர். ஸ்ட்ராபெர்ரி பழங்களை கொண்டு பிரியாணி தயாரித்திருந்தால் அதை ஏற்றுக்கொண்டு இருக்கலாம், ஆனால், இங்கு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வெறும் அலங்கரிக்கவே  பயன்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டு உள்ளனர்.

Views: - 11

0

0