வகுப்பறைக்குள் நுழையும் முன் புன்னகை பயிற்சி செய்த ஆசிரியர்; இணையத்தில் வைரல்

By: Udayaraman
1 January 2021, 5:59 pm
Quick Share

வகுப்பறைக்குள் நுழைய முற்படும் ஆசிரியர், சிரித்த முகத்துடன் செல்வதற்காக, வெளியே நின்று புன்னகைக்க பயிற்சித்த நிகழ்வு பள்ளி ஒன்றில் நிகழ்ந்துள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாக, அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், சீனாவிலுள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள் நுழைய முயற்சிக்கும் ஆசிரியர், அதற்கு முன், மூச்சுப்பயிற்சி எடுத்து, முயற்சி செய்து சிரிப்பு பயிற்சி செய்வது பதிவாகி உள்ளது. வடக்கு சீனாவில் உள்ள கின்ஹுவாங்டாவோ என்ற நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்த வீடியோ பதிவானதாக கூறப்படுகிறது.

பள்ளியின் ஆசிரியர் வகுப்பறைக்கு முன் நின்று ஆழமாக சுவாசங்களை எடுத்துக் கொள்கிறார். பின் முயற்சி செய்து புன்னகையை வரவழைக்கிறார். இது வகுப்பறையின் வாசல் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவுகள் வெளியான நிலையில், ரெடிட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பலதரப்பிலிருந்து நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திடீர் பிரபலமான அந்த ஆசிரியர் கூறுகையில், ‘‘நான் சமூகவலைதளங்களில் பிரபலமாவேன் என எதிர்பார்க்கவில்லை. ஒரு நல்ல ஆசிரியராக இருக்கவே நான் விரும்புகிறேன்’’ என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் 100 சதவீதம் ஹீரோக்கள் என ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிறைய ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்காக இதுபோல் செய்வதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள் எனவும், இந்த வீடியோ எனது இதயத்தை இளக செய்தது எனவும் வாழ்த்தி உள்ளனர்.

Views: - 36

0

0