11 மாத கோமாவுக்கு பின் முழித்த இளைஞர்! கேட்ட கேள்வியால் ஆடி போன டாக்டர்கள்

3 February 2021, 2:01 pm
Quick Share

கொரோனா ஊரடங்குக்கு முன் 19 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் அடிபட, கோமா நிலைக்க சென்றார். மருத்துவமனையில் 11 மாத சிகிச்சைக்குப்பின் விழித்தெழுந்த அவர் கொரோனா சூழ் உலகம் குறித்து எதுவும் தெரியாமல் டாக்டர்களிடம் முழித்திருக்கிறார்.

பிரிட்டனில் உள்ள ஸ்டாஃபோர்ட்ஷையர் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்த ஜோசப் ஃபிளாவில் என்ற டீன் ஏஜ் இளைஞர் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், லீசெஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மேலும் மோசமடைய கோமா நிலைக்கு சென்றுவிட்டார். பிரிட்டனில் கொரோனா லாக்டவுன் போடுவதற்க 3 வாரங்களுக்கு முன்பு அவர் கோமாவுக்கு சென்று விட்டார்.

11 மாதங்கள் உலகில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல், கோமாவில் படுத்த படுக்கையாகி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு கொரோனாவிலிருந்து விழிப்பு வர, அவர் 11 மாதங்கள் கோமாவில் இருந்த விஷயத்தை அவரிடம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அருகில் தனது பெற்றோர்கள் இல்லாதது கண்டு டாக்டர்களிடம் அந்த இளைஞர் கேள்வி கேட்க, கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி இல்லை என விளக்கியிருக்கிறார்கள்.

கொரோனா லாக்டவுனா? எதுக்கு? என்ன ஆச்சு என அவர் அடுத்தடுத்து கேள்விகள் கேற்க டாக்டர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. இளைஞரை அவரது குடும்பத்தினரும் இதுவரை சந்திக்கவில்லை. மேலும் லாக்டவுன் குறித்தும், சமூக இடைவெளி குறித்தும் அந்த இளைஞருக்கு எவ்வாறு புரிய வைப்பது என அனைவரும் குழம்பி போய் உள்ளனராம். தற்போது நர்ஸ்களுக்கு ஹை–பை சொல்லும் அளவுக்கு அவர் தேறிவிட்டார். விரைவில் அவர் வீடு திரும்ப வேண்டும் என அவரது குடுமப்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.

Views: - 0

0

0